EPISODE 12

7 0 0
                                    

மைக்கல் சொன்னது உடனே நியாபகத்துக்கு வரவே போவதா வேண்டாமா என்று யோசித்தான் டேனி.

நடக்கிற மர்ம விடயங்களுக்கு கொஞ்சமேனும் தெளிவுக்கு வரவேண்டுமென்றால் போய்த்தான் ஆகவேணும்.

என்று எண்ணி கொண்டு முக்கியமான வேலை இருப்பதாக கூறிவிட்டு டேனி தனது ஆபீசுக்கு வந்தான்.

அங்கு வேலை செய்த பலரை காணவில்லை.

அந்த இடத்தில் வேறு ஆட்கள் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தனர்.

மிஸ்டர் தாமஸ் இருக்கும் அறைக்கு சென்றான்.

"உள்ளே வா டேனி, அம்மா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்காங்களா?"

என்று நலம்விசாரித்தார். டேனிக்கு கோபம் வந்து கதவை பலமாக அடைத்து விட்டு நேரடியாக கேட்டான்.

"என்ன நடக்குது இங்கே?.உங்களோட சேர்ந்து வேலை செய்ய முடியாதுன்னு சொன்னதுக்கு பழிவாங்குறீங்களா?,
பணத்தை தந்து என்னை விலைக்கு வாங்க பாக்குறீங்க அதானே?"

"அவசரப்படாதே டேனி. உன்கிட்ட ரொம்ப முக்கியமான சில விஷயங்கள் பேசணும்."

என்றதும் டேனி கொஞ்சம் யோசித்து விட்டு பொறுமையாக இருந்தான். தாமஸ் பேச ஆரம்பித்தார்.

"நீ எங்களை விட்டு போனதும். நாங்க எங்க வேலையை தொடர அந்த வீட்டுக்கு போனோம்.

அன்னிக்கி ராத்திரி டாக்டர் வில்லியம் குளிக்குறதுக்காக பாத்ரூம் போனாரு.

பாத்ரூம்ல வெச்சு பயங்கரமா தாக்கப்பட்டு இறந்து போயிட்டாரு.

அவரோட முகத்தை பாக்க கூட முடியெல்ல அந்த அளவு கொடூரமான பேய் அது.
நாங்கல்லாம் கொலப்ஸ் ஆகி அடுத்த நாள் காலையில் அவர் குடும்பத்துக்கு இன்போர்ம் பண்ணிட்டு அவரை நல்லடக்கம் பண்ணிட்டு இங்க வந்துட்டோம்.

ஆனா இங்கவந்தா நடந்தது வேறு. வில்லியமோட மனைவியும் குழந்தையும் கேஸ் சிலிண்டர் வெடிச்சு அதேனாளில் இறந்து போனாங்க.

இதை சொல்லுறதுக்காக உனக்கு நிறையவே போன் பண்ணி இருந்தேன் .ஆனா நீ ஆன்ஸ்வர் பண்ணவே இல்லை.

இந்த கேஸை இனி எடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணி நானும் மைக்கலும் ஒதுங்கிட்டோம்.

ஆனா நாங்க ஒதுங்கினாலும் அது நம்மை விடப்போறதில்லை."

"என்ன சொல்றீங்க?"
என்று டேனி கேட்டான்.

மிஸ்டர் தாமஸ் மைக்கலை கூப்பிட்டார். உள்ளே இருந்து மைக்கல் வந்தான். ஆனால் மைக்கல் தான் அணிந்து இருந்த கறுப்பு போர்வையை அகற்றினான்.

"பாரு இவன் அவனோட கையை இழந்துட்டான். உயிரே போய் இருக்கும் தற்செயலா நான் அவன் வீட்டுக்கு போனதால் அந்த ஆன்யா கையோட விட்டுடுச்சு"

"ஆன்யா எங்குறது யாரு?அவளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?"

என்று டேனி தாமஸை பார்த்து கேட்டான். தாமஸ் கொஞ்சம் அமைதியாக இருந்து விட்டு மறுபடி பேசினார்.

"இந்த தொடர் கொலைகளை நிறுத்தலேன்னா அடுத்து அடுத்து நம்மளுக்கு மட்டுமில்ல நம்ம குடும்பத்துக்கும் ஆபத்து."

அப்போது மைக்கல் சொன்னான். "என்னை பயங்கரமாக தாக்கிய அந்த உருவத்தை என்னாலே மறக்கவே முடியாது. அது கடைசியா என்னோட வீட்டு சுவரில் அதோட பெயரை எழுதிட்டு மறைஞ்சி போச்சு.

நல்லவேளை எனக்கு குடும்பம் என்னு சொல்லி கொள்ள யாருமே இல்லை "

என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.

இதுக்கு நாம முடிவு கட்டலேன்னா உஉன்னோட அம்மா, தங்கச்சி எல்லாருக்குமே உயிர் ஆபத்து ஏற்படும்.நல்லா யோசிச்சி ஒரு முடிவு பண்ணு."

"ஆமா டேனி நாம ஆரம்பிச்சதை நாமதான் முடிக்கணும். இதுக்காக நமக்கு ஹெல்ப் பண்ண கூடிய ஆளுங்களும் கிடையாது"

என்று மைக்கல் உருக்கமாக பேசினான்.

"இதுக்கெல்லாம் காரணம் அந்த ஆன்யா தான் என்னா, நான் என்னோட குடும்பத்தை காப்பாத்த உங்களுக்கு உதவி செய்றேன். ஆனா அதுக்காக நான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கிறேன். நாளைல இருந்து வர்றேன்."

என்று விட்டு டேனி போய்விட்டான்.

*****

அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் உள்ளே இருந்து ஒரு பெண் குரல்.

"ஆஹ்ஹ் அதோ டேனியே வந்தாச்சு. உள்ள வா டேனி!"

என்றுவிட்டு கேக் தட்டுடன் அவள் வந்து நின்றாள்.

👁👁👁👁

Ghost In bloodWhere stories live. Discover now