முன்னுரை

820 71 86
                                    

ஆழி பேரலைகள் அனத்தமின்றி நிசப்தமாகும் பொழுது அவள் வருவாள்,
அந்தி சூரியன் ஆழ்கடலில் அடங்கும் பொழுது அவள் வருவாள்,
சொடுக்கும் நொடியில் கொடும் பனி சூழ்ந்தால் உடனே படகை நிறுத்து...
தொலை தூரத்தில் விளக்கொளி தெரிந்தால் உடனே படகை திருப்பு....
மதி மயங்கும் குரலில் ஒரு கானம் கேட்டால், உயிர் இருக்கும் வரை துடுப்பு போடு..
இறுதியில் இளம் பெண்ணின் அழுகை கேட்டால், அசைவற்று நின்று கொள்,
இனி ஓடி பயனில்லை..
அவள் உன்னை நெருங்கியிருப்பாள்,
இரு கண்களை மூடி இறைவனை வேண்டிக்கொள்..
மரணத்திற்கு அஞ்சாதே..
மறந்தும் அவளிடம் கெஞ்சாதே..
மனமெங்கும் சொல்லிக்கொள்..
அவள் பெண் இல்லை.. அவளுக்கு இரக்கம் இல்லை.. அவள் ஆழ்கடல் அரக்கி.. அவள் பெயர்....

மூளி.....

( விரைவில்..)

மூளிWhere stories live. Discover now