சுழியம்

578 45 72
                                    

அந்த நீண்ட ஒளியூட்டும் துப்பாக்கியின் கொள்ளி வாயை வானோக்கி உயர்த்தி, நடுங்கிய விரல்களில் ட்ரிகரை அவள் அம்மா அழுத்த, டப் என்ற சத்தத்துடன் துப்பாக்கியிலிருந்து ஜொலிக்கும் வண்ணத்தில் குண்டு வெளிப்பட்டு இருள் வானை வண்ணமாக்கி மேகங்களுக்கு இடையில் மாயமாகி போனது, அது வெளியிட்ட புகையை விலக்கையில் தூரத்தில் ஏதோ வெளிச்சம் குற்றுயிராய் நெளிந்தது. அதை பார்த்ததும் அம்மா முகத்தில் நெடு நாளாய் மறைந்திருந்த புன்னகை வெளிப்பட்டது.

" யெஸ்.. யெஸ்.... அங்கே பாருங்க.. " உற்சாகத்தில் அம்மா அவளையும் அண்ணனையும் வாரி அணைத்துக் கொண்டாள், அண்ணனுக்கு வயது பதினெட்டு, அவளுக்கு நாளையுடன் பத்து முடிகிறது.

" தூரத்துல ஒரு கப்பல் தெரியுது.. எப்படியும் அவங்க இங்கே வர அரை மணி நேரம் ஆகும். அது வரை இந்த போட் தாங்காது, fuel வேற லீக் ஆகுது.. நீங்க இந்த சேப்ட்டி போட்டை ரெடி பண்ணுங்க , நாமலே அந்த கப்பலை நோக்கி போயிடலாம்.. " என்றவள் அவசரமாய் திரும்ப,

" அம்மா எங்கே போற.. " அண்ணன் தடுத்தான்.

கலங்கிய முகத்தில் அம்மா, " உங்க அப்பா.. அவரையும்.. "

" வேண்டாம் ப்ளீஸ்மா.. அவரால தான் இதெல்லாம்.. "

" அதுக்காக அப்படியே விட்டுட்டு போகனுமா.. செத்திடுவாருடா.. நான் அசைய விடாம தான் கட்டி வச்சிருக்கேன்.. எப்படியாச்சும் கூட்டி வந்துடுறேன்.. நீ தங்கச்சியை பாத்துக்கோ.. " அந்த படகின் பேஸ்மண்ட் அறையின் கதவை திறந்தவள், இறங்கும் முன் தன் குழந்தைகளை ஒரு முறை ஆசையாய் பார்த்தாள்.
" நான் வரை நேரமாச்சுன்னா நீங்களே செப்ட்டி போட்ல கிளம்பிடனும்.. காத்து சாதகமான தான் இருக்கு, லேசா துடுப்பு.."

"ஏம்மா இதெல்லாம் சொல்ற.. எனக்கு தெரியும்மா.. சீக்கிரமா நீ போய்ட்டு வா.. "

ஏதோ சொல்ல வந்தவள் , கண்ணை துடைத்தபடி பேஸ் மன்ட்டில் குதித்து கதவை டாம்.. என அடைக்க,
அவளும் அண்ணனும் மட்டுமே, அண்ணன் விரைவாய் சேப்ட்டி போட்டை இறக்கி தயார் செய்யும் வேலையில் மும்முரமானான்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 20, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

மூளிWhere stories live. Discover now