"இப்ப நீ என்ன சொல்ற ஒன்னும் மட்டுப்படலையே...நேரா பேசிடனும்" பாபு அவளை பார்த்து வினவினான்"எனக்கு நேரம் இல்ல.. நா கிளம்புறேன்" என செல்வம் நகர்ந்தாள்...
அமைதியாக கண்களில் ஏதோ தேடுதலுடன் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் நேசன்.
"நேசா! இவ கிளம்புறாளாம்", என பாபு அவன் தோளை தட்ட நினைவுக்கு வந்தான்.
"உனக்கு எப்படி தோணுச்சு" என அவளை நம்பாமல் கேட்டான்.
'என்ன' என்ற பார்வையை உதிர்த்தாள்.
அவள் கையிலிருந்த புத்தகத்தை சுட்டி காட்டினான்.
"இந்த புத்தகம் உங்களுக்கு எப்படி கிடச்சது",என செல்வம் கேட்டுக் கொண்டே மிதிவண்டியை நெருங்கினாள்.
"ஒரு வாரத்துக்கு மேல இருக்கும்", என நேசன் அவள் மிதிவண்டியை நகர்த்தினான்.
'அப்படியா' என பார்வையுடன் அவன் மிதிவண்டியில் வைத்திருந்த கையை பார்த்தாள்.
"கிடச்ச கத எல்லாம் இருக்கட்டும் நீ எப்புடி அத வாசுச்ச இவ்ளோ நாள் என்கிட்ட இருந்தும் நா அந்த கோணத்துல படிக்கல", என மிதிவண்டியின் கைப்பிடியை அழுத்திப் பிடித்தான்.
"அது அவ்ளோ கருமாயப்படுற விஷயம் இல்ல...மேலாக பார்க்குறப்போ அது வெறும் புரியாத ஒரு கவிதை மாதிரி தான் இருக்குது, நல்ல உத்து பார்த்த வேற மாதிரி இருக்கும் துணைக்கு இப்போ நா சொன்னது கூட இப்படி தான் இருந்தது..
'உலகம் உன்னை கவிஞன் ஆக்க
விழித்திரு எனது மன்னே மீமீசை
துருவங்கள் ஒரு களிப்பை உனக்கு
கொடுக்க நான் கனா கண்ட காலம்
அது'...படிச்சா புரியாம இருக்குற இந்த வரி உள்ள எழுத்துல சிலது நல்லா பெருசா என்னை பார் மாதிரி எழுதி இருக்காங்க" , என அவள் அந்த வரிகளை சுட்டிக்காட்டினாள்.
பாபு வேகமாக அருகில் வந்து "இந்தாம்மா கொடு நாங்களும் பாக்குறோம் வேற கோணத்துல" என வாயைக் கோணிக் கொண்டு வாங்கினான்.
"மாப்ள! ஆமா பெருசா நெளிச்சு சுளுச்சு எழுதுன எழுத்தெல்லாம் சேர்த்தா வேற மாதிரி தான் இருக்கு 'ஆகாய யுவனர்கள் கட்டி காத்த
கால சாத்திரம் சரித்திர வசனமடி என்ற வார்த்தைகள் ஆசை
வார்த்தைகள் என்றாகுமா
சொல்லுவோய்'இத இப்படி வரும்!
மாப்ள!?...
ஆ..ஆயுட் கால சாச..னமடி என்..வார்த்தைகள் ஆசை வார்த்தைகள் என்றா....ய்", என
எழுத்துக்கூட்டி உலறினான்.
DU LIEST GERADE
நீ பேசிய வார்த்தைகள் போதுமடி
Mystery / Thriller"உன் வார்த்தைகள் நீண்ட நாட்களுக்கு முன்னர் ஏற்படுத்திய காயம் நெஞ்சில்ஆறாமல் வாடி வதங்கியது...இன்று உன் முன்னே நிற்கிறேன் அதன் காயாத உதிர வாடை உனக்கு வருகிறதா.... இல்லை என்றால் உனக்கு அதை திருப்பி கொடுக்கவா...", என அந்த உருவம் அவள் கழுத்தை நெறித்தது...