காட்டுத்தீ

7 1 1
                                    

"தீ" என்றதும் பலருக்கு வீடு, அலுவலகம், மற்றும் பொதுவிடங்கள் இதை பற்றி தான் நமது சிந்தனை செல்லும். .., காட்டுத்தீ பற்றிய கவலை இருக்காது. ஏனெனில் மனிதன் அவனை பற்றி மட்டும் சிந்திப்பவன். .., 
சரி அப்பயென்றால் காட்டுத்தீக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். ...அதனால் மனித இனத்திற்கு என்ன இழப்பு என்று உங்கள் மனதில் ஓடும். ..

காட்டுத்தீ என்பது வெறும் சூழலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் பார்க்க முடியாது. .,சூழலியலை கடந்து மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் இத்துடன் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. .,. 
ஒரு காடு அழிந்தால் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் அழியும்.....
புது அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகைகள், அழிந்து ஒட்டுமொத்த சூழலியல் மண்டலமே சீர்குலைந்து போகக்கூடிய நிலை ஏற்படும்...

உயிரினங்கள், மரங்கள், செடிகள், இவைகளில் இருந்து பெறப்படும். , உணவு, மருத்துவம் போன்றவற்றை அண்டி வாழும் மக்கள், நிறுவனங்கள் இவற்றை இழக்க நேரிடும். .. 
கோடைக்காலத்தில் மழைப்பொழிவு இல்லாமல் போவதால் இலைகள் உதிர்ந்து விடும், அதிக வெப்பத்தினால் இலைகள் பற்றி எரிந்து விடும். .,

சில காட்டுத்தீ மனிதனின் அலட்சியத்தாலும் நிகழும். 
உத்தரகாண்ட் மலைப்பகுதியில் பைன் மரங்கள் அதிகம் காணப்படும். .. இம்மர இவைகளுக்கு எளிதில் தீப்பற்ற கூடிய தன்மை உண்டு. ...
ஆகையால் அங்கு அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது. ., 
அம்மலைப்பகுதியின் மொத்த பரப்பளவு 53.483 கீ.மீ இதில் 65% காடுகள் தான். ..ஓரே ஆண்டில் மட்டும் 14.,824 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது "இதை தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை". .... ( இது ஒரு தகவல் தான் )
ஒரு வீட்டில் தீ பிடித்து எரியும் போது மற்றவர்கள் அதை போராடி அணைப்பது அவ்வீட்டை காப்பாற்ற மட்டுமல்ல, அடுத்த வீட்டிற்க்கும் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவும். ....
அவ்வாறாயின் ஒரு காடு அழிந்தால் எவ்வளவு இழப்பு ....
ஒவ்வொரு காடும் கோடிக்கணக்கான வீடுகளின் வாழ்வாதாரம் என்பதை உணர்வோம். ..!

இதை படித்து முடிக்கும் போது....,

உங்க மனசுல. ..காட்டுத்தீ பற்றி சின்ன feel அல்லது விழிப்புணர்வு  வந்தால் எனக்கு அது போதும். ..!
Tnx. ..frnds 😍😍😍🍫🍫🍫🍫🍫🍫


                         நட்புடன்: ANUPRIYA

🔥தீ🔥Where stories live. Discover now