மெல்லிய மழைச்சாரல் மண்ணைத்தொட , நாணத்தால் மண் தன் வாசத்தை குபீரென வீச, அனைத்தையும் அமைதியாக ஜென்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி.
வீசியது தென்றல் தானா? என கேட்கும் அளவிற்கு ஆழ்ந்த யோசனையில் முழுகியிருந்தாள்.
என்ன காரணம்? எல்லாம் நம் சிவா ஞாபகம்!!
கனவிலும் காணாத கனா போல வந்தான், நினைத்து பார்க்க இயலாத அன்பை தந்தான், இன்பத்திலும் துன்பத்திலும் சரிநிகர் என்றான், இருண்ட வாழ்வு வசந்தமானது.
என் மனமே பொறாமை கொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியை தந்தான்,கிழவியாகி கட்டையில் எரியும் வரை உன்னை கண்ணுக்குள் வைத்து தாங்குவேன் என்றான், இவை யாவும் அவன் செய்வான், ஆனால் நான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என பார்வதியின் மனம் மடைஉடைந்த ஆற்று வெள்ளம் போல எண்ணங்களால் கொப்பளித்தது.
பழகிய காலம் குறைவே என்றாலும் மனமெங்குமம் அவன் வாசம்!! யோசனையில் ஆழ்ந்தாள் பாரு.
அங்கே சிவாவும் அவனின் அம்மா சரசும் இதற்கு தீர்வு காண வழிகளை ஆராய்ந்த வண்ணம் இருந்தனர்.
சரசின் பால்ய தோழி சங்கரியின் ஞாபகம் அவளுக்கு வர, தன் பழைய டைரியில் அவளின் தொலைப்பேசி எண்ணை தேடினாள்.
சரசும் சங்கரியும் அமுதும் தமிழும் போல, சுபாவத்திலும் பழகும் விதத்திலும்,சுற்றாறுக்கு நல்லது செய்வதிலும். கால ஓட்டத்தினால் இருவரும் அவரவரர் வாழ்வை நோக்கி ஓடினர்.
ஆனாலும் தன்மீதான சங்கரின் அன்பு சற்றும் குறைவில்லாமல் இருக்கும் என்பதில் சரசுக்கு எள் அளவும் ஐய்யமில்லை.
மனநல மருத்துவராக சென்னையில் பணி புரியும் சங்கரியை தொலைப்பேசியில் அழைத்தாள் சரசு.
இருபது வருட கதைகளை பேசி முடித்தப்பின் தன் வருங்கால மருமகளின் "ஆன்ரோபோபியா" பிரச்சனையை எடுத்துக் கூறினாள் சரசு.
அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த சங்கரி, பார்வதியுடன் தன்னை நேரில் வந்து பார்க்கும்படி சரசை அழைத்தாள்.
DU LIEST GERADE
💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)
RomantikNow available on Amazon Kindle கல்யாணம் என்றாலே கொண்டாட்டம் மட்டும் தானா?? வீட்டைக்கட்டி பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு.... என பெரியவர்கள் சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க??, இங்க நம்ம வீட்டு கல்யாணம் எப்படி நடக்குது, அதில வர பிரச்சனைகள நம்ம ஹூரோ, ஹூரோ...