தட தட ரயிலின் சத்தம் இரவு ஒன்பதை தாண்டிட அந்த இரவு பழக்க பட்ட ஒன்றுதான் ஆனால் ஏனோ இன்று பயம் காரணம் நான் ஏறிய கம்பார்ட்மெண்ட் அங்கே மூன்று நபர் இளைஞர்கள் என்று கூற முடியாது நிச்சயம் இருவருக்கும் திருமணம் முடிந்துருக்கும் ஒருவனை பற்றி கணிக்க முடியவில்லை ஏதோ ஒரு நம்பிக்கையில் அமர்ந்திருக்கிறேன் ஹையோ எனது கடைசி நம்பிக்கையான பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியும் இறங்கிவிட்டார்... எப்படி எவ்வாறு சமாளிப்பது அவர்களின் பார்வையே சரி இல்லையே நாம எதையும் கண்டுக்க வேண்டாம் இசை பயப்படாத...
இவளோ பெரிய சென்னை மாநகரில் உனக்கு பயமா கூல் இசை கூல்... இன்னும் ரெண்டு ஸ்டாப் தான் நீ இறங்கிடலாம் ஓகே வந்துட்டு இனி நீ பயப்படாம நடக்கலாம் ஆனால் இன்னைக்கு ஏன் இந்த பரபரப்பான சென்னை அமைதியா இருக்கு... ஆமாம் இருக்க தானே செய்யும் நாளை தமிழ் வருடம் பிறக்குது அதோடு சனி ஞாயிறு விடுமுறை ஆனால் நீ ஓவர் டைம் பார்க்குறேனு இங்கே தங்கிட்ட... என்ன செய்றது நம்ம வீட்டு சூழ்நிலை அப்படி... சரி நீ உனக்குள்ள தானே பேசிக்குற ஆனால் ஏதோ வேற யாரோ பேசிக்குற சத்தம் கேட்குதே திரும்புவோமா வேணாமா வேணாம் வேணாம் இன்னும் ஐந்து நிமிடம் தான் நாம தங்கியிருக்க இடம் போயிடலாம்...
ஹையோ யாழி என்று தலையில் அடித்த படி அந்த புது வருடத்தில் சூரிய உதயத்தோடு கதறல் சத்தமும் நிறைந்திட அந்த சென்னை புறநகர் மருத்துவமனை பிணவறை முன் நின்று கதறியபடி இருந்தனர் யாழிசை பெற்றோர்கள்.. அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க இப்படி சத்தம் போடாதீங்க பாடி போஸ்ட்மார்டெம் முடுஞ்சு தான் வரும் என்று ஒரு போலீஸ் அவர்களை தடுக்க.. என் தங்கத்தை அப்போ உயிரோட தரமாட்டீங்களா என் பிள்ளை எப்படி போயிருந்தாலும் பரவாயில்லை அவளை என்கிட்ட உயிரோடு கொடுத்துடுங்களே நீங்க நல்லா இருப்பிங்க அவ உடம்ப கூறு போட பார்க்குறீங்களே ஹையோ ஹையோ கைல சுடுதண்ணி கொட்டுன கூட துடுச்சு போய்டுவளே அவ உடம்பை கூறுபோடுறேனு சொல்றிங்களே என கத்தி கதறும் மனைவியை ஆற்ற வழி இன்றி பக்கத்தில் யாழிசை தந்தையும் துடி துடித்து ஆண் என்ற கர்வம் தன் வீட்டு வாசற்படி தாண்டி தானே தன் மகளுக்கு தூசி விழுந்தாலும் இவருக்கு துக்கம் அடைக்குமே இன்று தன் மகளின் நிலை உணர்ந்து உயிர் இல்லா ஜடமாய் இறுகி உருகி நின்றிருக்க...