பொதுவாக, பலரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் ஒரு நிறுவனத்தை நிறுவிய பிறகு அல்லது அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அவர்களுடைய சீடர்களாலோ அல்லது மற்றவர்களாலோ எழுதப்படுபவையாகவோ இருக்கின்றன. அதனால் அவை 'நிறுவனம்' என்ற கோணத்திலிருந்தும், அவர்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அந்த கோணத்திலிருந்தும் எழுதப்படுகின்றன. ஆனால் என்னுடைய வரலாற்றை நானே 'சுயசரிதை'யாக எழுதுவதால், அது எப்படி நிகழ்ந்ததோ அப்படியே என்னால் எழுத முடியும். ஆகவே அதில் நிறுவன நோக்கமோ அல்லது மற்றவர்களின் தாக்கமோ இருக்க வாய்ப்பில்லை.
சிறுவயதிலிருந்து நான் எழுதிய வைத்துள்ள எனது குருமார்களுடனான கலந்துரையாடல்கள், எனது புகைப்படங்கள், என்னை சிறுவயதிலிருந்தே அறிந்தவர்களின் வாய்மொழிகள், எனது பரிவிராஜக வாழ்க்கை தகவல்கள், ஞானமடைந்த அனுபவம், அவதார நோக்கம், ஆன்மிக சங்கத்தின் தொடக்கம், இடையில் தடுக்க நினைத்த தடைகளைத் தகர்த்தது, அதன்பின் சங்கத்தின் வளர்ச்சி... என இன்றுவரை நடந்த நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு உயிர்ப்புள்ள நேரடி ஒளிபரப்பாகவே இருக்கும், நீங்கள் என்னோடு ஒருமைத்தன்மை உணர்வோடு பயணித்தால்!
- தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்
YOU ARE READING
நான் ஏற்கெனவே எழுதி வைத்ததையே செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்
Spiritualஎன்னுடைய வரலாற்றை, அது நிகழ்ந்த பிறகு நான் உங்களுக்குச் சொல்லவில்லை, நான் ஏற்கெனவே எழுதி வைத்ததையே செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான், 'இந்த வயதில் ஞானமடைந்தேன்' என்று சொல்வதுகூட, உங்களுடைய புரிதலுக்காகவே! எல்லாமே என்மேல் ஒரு திரையில் எழுதப்பட்ட...