✒ துளி 1 👑

9K 187 224
                                    

இரவு நேரத்தில் நியான் விளக்குகளின் ஒளியில் "கோல்டன் கிரவுன் பப் " என்ற வார்த்தை மிளிர அந்த கட்டிடத்தின் பார்க்கிங்கில் நிற்கும் விலையுயர்ந்த கார்களே அதனுடைய தரத்தை காட்டியது.

கிழக்கு கடற்கரை சாலையின் எத்தனையோ பப்களில் அது மட்டும் தனித்து நின்றதற்கான காரணம் தமிழகத்தின் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்கட்சியினரின் வாரிசுகள், பெரும் பணமுதலைகள் மட்டுமே அங்கே செல்ல முடியும் என்பது மட்டுமே!!

அதன் வாயிலில் வந்து நின்ற ஊபர் டாக்சியிலிருந்து இறங்கினாள் அவள். கறுப்புநிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ஸ்கர்ட் அவளின் அழகை தூக்கி காட்ட கர்லிங் செய்யப்பட்ட கூந்தலை காதின் பின் புறம் ஒதுக்கியபடி தன் ஐந்தரையடி உயரத்துக்கு சிறிதும் தேவையற்ற ஹைஹீல்ஸ் அணிந்த கால்களை மடித்தபடி நின்றாள்.

 கறுப்புநிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ஸ்கர்ட் அவளின் அழகை தூக்கி காட்ட கர்லிங் செய்யப்பட்ட கூந்தலை காதின் பின் புறம் ஒதுக்கியபடி தன் ஐந்தரையடி உயரத்துக்கு சிறிதும் தேவையற்ற ஹைஹீல்ஸ் அணிந்த கால்களை மடித்தபடி நின்றாள்

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.

அவளின் பின்னே இறங்கிய இன்னொருத்தி கால்முட்டியை தொட்ட ஸ்கர்ட்டை இழுத்துவிட அவளை முறைத்தாள் முந்தையவள்.

" கம் ஆன் மேகி! இந்த ஸ்கர்ட்டோட லெங்த்தே இவ்ளோ தான். இதுக்கு மேல இழுத்தாலும் அது நீளமாகாது " என்று சொல்லிவிட்டு தோளை குலுக்கியவளை திகைப்புடன் பார்த்தாள் அந்த ஐந்தடி உயர மேகி.

அதே திகைப்புடன் " வனி உன்னை மாதிரி என்னால சாதாரணமா இருக்க முடியலடி! எனக்கு வேற எதுவும் டென்சன் இல்ல. இந்த காஸ்டியூம் தான் பிரச்சனை" என்று மீண்டும் இழுத்துவிட அந்த வனிக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது.

" மேகி! எங்க பாட்டி ஒரு பழமொழி சொல்லுவாங்க. நாய் வேஷம் போட்டா குலைச்சு தான் ஆகணும்னு. இப்போ நாம போட்ட வேஷத்துக்கு இந்த காஸ்டியூம் தான் கரெக்ட். பேசாம என் கூட வா. நான் இருக்கேன்டி " என்று அவளுக்கு தைரியமூட்டியபடி உள்ளே அழைத்து செல்ல வாயிலை நோக்கி நடைப்போட்டாள்.

மரம் தேடும் மழைத்துளி ✒👑Onde histórias criam vida. Descubra agora