Part 1

31 0 0
                                    


Siddharth-ன் ஆறாம் semester துவங்கி சில நாட்களே ஆனது. காலேஜ் முடிய இன்னும் ஓர் ஆண்டே இருந்தது. ஆண்கள் பள்ளியில் படித்து, 0.5 cut off-ல் Computer Science Engineering seat-ம் முடிந்து விட, தமிழ்நாட்டில் Top கல்லூரி என்பதால் வேண்டா வெறுப்பாக Mechanical Seat-யை தேர்வு செய்தான். கல்லூரிக்குள்ளே பெண்களை sight அடித்து நண்பர்களோடு சுற்றி வந்தாலும், Crush-உடன் பேச கூச்சப்பட்டும், Single ஆகவே இருந்தான். தன்னுடைய நண்பர்களின் வண்டியின் பின் இருக்கை என்றும் நிறைந்திருக்க இவனுடையதோ என்றும் காலியாகவே இருந்தது. Siddharth-ன் ஐடியா மூலம் அவனுடைய நண்பர்கள் commit ஆனார்கள் ஆனால் அதே யோசனைகள் இவனுக்கு rivet அடித்தது.

Semester துவங்கி சில நாட்கள் சென்றது. Final year students அனைவரும் அவர்கள் இறுதி ஆண்டு project-யில் busy ஆக இருந்தனர். சிலர் கல்லூரியிலும், சிலர் தொழிற்சாலைக்கு சென்று Project செய்துக் கொண்டு இருந்தனர்.

Final years அனைவரும் இன்னும் சில மாதத்தில் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும் என்று வருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது தான் Coronavirus என்று கிருமி China முழுவதும் பரவி, பல உயிர்களை பலி வாங்கிக்கொண்டு இருந்தது. விரைவில் உலகம் முழுவதும் பரவி, இந்தியாவிலும் பரவியது.

மக்கள் இடையே குழப்பம், பயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. யார் இரும்பினாலும் ஓர், இரு வினாடிகள் திரும்பி பார்த்தார்கள். பயத்துடன். மருத்துவர்கள் மட்டுமே அணிந்து இருந்த Mask-யை எல்லாரும் அணிய ஆரம்பித்தனர். கூட்டம் இருக்க கூடிய இடத்தில அதிகம் பரவும் என்பதால், அனைவரும் Social Distancing பின் பற்றி, தள்ளியே நடந்தனர்.

நிலைமை மிகவும் மோசமாகாமல் இருக்க, பள்ளி, கல்லூரிகள் ஏன் என்னவானாலும் வேலைக்கு வர சொல்லும் அலுவலங்களுக்கும் leave கொடுக்க வேண்டிய நிலைமை. இவ்வாறு இருக்கையில், மார்ச் 21, பிரதமர் அவர்கள் நாடு முழுவதற்கும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிற்றார். அது ஒரு ஞாயிறுக்கிழமை. வழக்கமாக இருக்கும் மக்கள் நடமாட்டத்தை விட மிகவும் குறைவாகவே இருந்தது. வீட்டுக்குள் அனைவரும் வெகு நாட்களுக்கு பிறகு ஒன்றாக இருந்தனர்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 07, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Quarantine காதல்Where stories live. Discover now