🌹03

162 11 4
                                    

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ....
(சில்லென்று ஒரு காதல்)

பின்னால் துரத்துபவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தாள் அவள். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாடியது. ஆனால், துரத்துபவர்களின் எண்ணமே அவள் பெண்மையைத் திருடுவது. எனவே நின்றால் ஆபத்து என்பதை உணர்ந்ததால் மிகவும் சிரமத்துடன் ஓடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் குடித்திருந்தபடியால் சிறிது தள்ளாட்டத்துடனேயே ஓடி வந்தார்கள்.

ஓடிக் கொண்டிருந்தவள் சற்றுத் தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைக் காணவும் மனதில் நிம்மதியடைந்தாள். அது ஏதோ ஒரு வீட்டின் வெளிச்சமாக இருக்கலாம் என எண்ணியவள் அதை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

ஆனால் அருகே செல்லச் செல்லவே அது வீடு அல்ல, சுடாகாட்டின் வாயிலில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு என அறிந்து கொண்டாள். அவளுக்குப் பயத்தில் தொண்டை உலர்ந்து விட்டது. திரும்பிப் பார்த்தாள். தூரத்தே அந்த இருவரினதும் உருவம் இருட்டாகத் தெரிந்தது. திரும்பிப் போவதற்கும்
வழியில்லை. வேறு மார்க்கம் இல்லை என யோசித்தவள், துணிவை வரவழைத்துக் கொண்டு அந்தச் சுடுகாட்டுக்குள்ளேயே சென்றாள். அங்கே இருந்த ஒரு சிறிய கட்டடத்தின் பின் சென்று மறைந்து கொண்டாள்.

சற்று நேரத்தின் பின் அந்த இருவருடைய குரல் அருகில் கேட்டது. மூச்சை அடக்கிக் கொண்டு சத்தமின்றி அமர்ந்திருந்தாள்.

அங்கே வந்தவர்கள் அந்த சுடுகாட்டுக்குள் வரத் தயங்கினார்கள் போலும்.
"டேய் குணா எங்கடா ஆளையே காணோம்"

"ஒருவேளை இதற்குள் போயிருப்பாளோ?"

"சீசீ.. நானே அதற்குள் போகமாட்டேன். அவளுக்கு அந்தத் தைரியம் இருக்காது"

உள்ளம் கொள்ளை போகுதடாWhere stories live. Discover now