அறம் தன்னில்
தடம் பதிக்கவே
மதம் என
மறந்தவன்
மதம் தன்னில்
மதம் பிடித்து
மனிதன் எனும்
பொதுமையையும்
மறந்தான்....மனிதம் மனம்
எனும் மனை தேடி
மறத்துப்போக
கொரோனா எனும்
கயிறு கண்டு
பற்ற எண்ணி
கரம் உயர்த்த
சிறுபான்மையின்
உரிமை சிதறலில்
அதுவும் சிதைந்து
போனது.....(மதங்கள் கடந்து மனிதர்களையும்,அவர்களின் உணர்வுகளையும், பிற உயிர்களையும் நேசிப்பதே மனிதமாகும்..ஒரு மனிதனை உணர்வு ரீதியாக வருத்துவது மனிதம் அற்ற செயலே...
ஒரு உயிருக்கு விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை இருக்க அதன்படி வாழும் உரிமை முக்கிய காரணம் இன்றி மறுக்கப்படக்கூடாது....)