ஹாய் பிரண்ட் எப்படியோ உள்ளத்தைகொள்ளை கொண்டவன் பாகம் 1முடிச்சிட்டேன் அதுல கொஞ்சம் சயின்ஸ், கிரைம்னு போயிருக்கும் ஆனா இதுல முழுக்க முழுக்க காதல், சண்டை , கொஞ்ச கொஞ்சம் சோசியல் மெசேஜ்... இப்படி கொடுக்கலாம்னு இருக்கேன்.... இது முழுக்க முழுக்க வாசகர்களான உங்க விருப்பத்தால் மட்டும்தான்
எல்லோரும் எபிலாக் வேணும்னு கேட்டீங்க... நான் கதையை தொடர்வதால் எபிலாக் கொடுக்காமல் ப்ரோலாக் கொடுக்கறேன்....
இதும்மா... இதும்மா எங்க இருக்க என்று வீடு முழுவதும் தேடினான் விஷ்ணு
என்னடா எப்போ பாரு ஆபிஸ் விட்டு வரும் போது என்னை ஏலம் விட்டுட்டே வர...
தெரியலடி... எப்போமே நீ நான் வரும்போது வெளிய இருந்து ரீஸிவ் பண்ணியே பழக்கிட்ட .... இப்போ மாசமா இருக்கறனாலே நீயும் வெளியவரமாட்டிங்கற....அதுக்கே பழகணுவனளா....நீ வெளிய இல்லாம ஒரு மாதிரி இருக்குடி என்று பின்னால் இருந்து அவளை அணைத்தவன் அவள் மேடிட்ட வயிற்றில் கையை வைத்து தடவி குடுத்தான்...
விணு எனக்கு மட்டும் உன்னை வெளிய வந்து ரிஸீவ் பண்ணகூடாதுனு ஆசையா சொல்லு.. ஏற்கனவே நமக்கு கல்யாணம் ஆகி 4வருசமா குழந்தை இல்லை....இப்போதான் அந்த ஆண்டவன் புண்ணியத்துல குழந்தை கிடைச்சிருக்கு இப்போ போய் நான் சும்மா மாடிபடி ஏறி இறங்குனா குழந்தைக்கு எதும் ஆயிடுமோனு பயம்தான்... விணு என்று அவன் கன்னத்தை பிடித்து தனது இதழை ஒற்றினாள்...
சரி விடு.... இதும்மா பாப்பா என்ன சொல்றா.... அப்பாவை காணானு கேட்டாலா.... என்றான் ஆசையாக
உன்னோட பாப்பாதானே எப்போ பாரு வயித்துள உதைச்சிட்டே இருக்கா... அப்படியே அப்பனை போல சேட்டை என்றாள் புன்னகையுடன்...
அடிபாவி.... நானா இப்படிலாம் சேட்டை செய்வேன்.... பாப்பா உன்னோட ஜெராக்ஸா இருப்பானு நினைக்கறேன் என்றவன்... இனியாவை அழைத்துகொண்டு போய் பெட்டில் உக்கார வைத்தான் அப்போது ஜானகி இனியாவிற்கு ஜூஸ் எடுத்துவரவும் அவரிடம் வாங்கியவன் அவளுக்கு தானே ஊட்ட ஆரம்பித்தான்...
விணு நம்ப இந்த நிலைக்கு வரதுக்குள்ள உன்னை நான் ரொம்ப கஷ்டபட்டுதிட்டேன்ல என்றாள் பழைய நினைவுகளின் தாக்கதில் கவலையாக...
ஏண்டி லூசு மாதிரி பேசற....எனக்கு நீ உயிர்டி... உன்னை அந்த சத்யாவுக்கு தாரை வார்த்து குடுத்துட்டு நான் எப்படி உயிரோட இருப்பேன்னு நினைச்ச என்றான்...
விணு இந்த காதலுக்கு நான் தகுதி ஆனவளா?? என்றாள்
போடி பைத்தியம் கண்டதை பேசி என்னோட செல்லத்தை டையர்ட் ஆக்காம தூங்கு என்றான்.....
YOU ARE READING
உள்ளத்தை கொள்ளை கொண்டவன் பாகம் 2
Romanceவெற்றிகரமாக பாகம் 1முடித்து பாகம் 2ஆரம்பித்துவிட்டேன்