அத்தியாயம்-2

28 1 1
                                    

  உள்ளே நுழைந்த அவளின் மீது  அங்கிருந்தவர்களின் பார்வை ஒரு நொடி தொட்டு மீண்டது.. பின்பு  எப்பொழுதும்போல் அவளின் ப்ராஜெக்ட் ஹெட் முறைத்தார். அவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல் தன் இருக்கையை நோக்கி விரைந்தாள் இலக்கியா.. அவள் அமர்ந்தது தான் தாமதம் அவளின் தோழி வித்யா இவளைப் பார்த்து, "அடியே! இன்னைக்கு மா லேட்டா வருவ? மீட்டிங் முடிஞ்சதும் சொட்டை தலையன் என்னெல்லாம் சொல்ல காத்துகிட்டு இருக்கானோ. இன்னைக்கு உன்னோட காதுல இருந்து ரத்தம் வர போறது கன்ஃபார்ம் எதுக்கும் ஒரு பஞ்ச ரெடியா வச்சுக்கோ" என்றெல்லாம் அவள் சொல்லிக் கொண்டிருக்க இவளின் கவனமோ வேறு எதையோ பார்ப்பதில்  இருந்தது.. இலக்கியாவிடமிருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாததால் அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதனை வித்யா கவனித்தாள்.. தன் தோழியின் புதுவித மாற்றத்தைக் கண்டு சற்று ஆச்சரியமடைந்தால், ஏனென்றால் இலக்கியாவிற்கு வேலை நேரத்தில் வேறு எதிலும் கவனம் செல்லாது அதுமட்டுமன்றி ஆண்கள் என்றாலே அவளுக்கு சற்று அலர்ஜி அவளின் அண்ணனையும் தந்தையையும் தவிர.. இலக்கியாவோ இது எதையுமே கண்டுகொள்ளாமல் அங்கு வந்திருந்த புது ஆடவனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..  அந்த ஆடவனது எக்ஸ்ரே கண்களும் இவளைத்தான் அதிர்ச்சியோடும் கோபத்தோடும் நோக்கிக் கொண்டிருந்தன..  இவ்வனைத்தையும் கண்ட வித்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை இருப்பினும்வித்யா தன் தோழியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டி அவளின் காலில் மிதித்தால்.. அதன்பின்னரே தன்னுணர்வு பெற்ற இலக்கியா, "என்னடி உனக்கு பிரச்சன? எதுக்கு இப்ப என் கால மிதிச்ச?" என்று பல நாட்களுக்குப் பிறகு தன் உயிர் நண்பனை காண விடாமல் செய்த தன் தோழியின் செயலை எண்ணி எரிச்சலோடு வினவினாள்.. அதற்கு வித்யாவோ, "வந்தது லேட்டு இதுல என்னடி என்னைக்கும் இல்லாத திருநாளா எங்கெங்கேயோ உன்னோட கவனம் இருக்குது? எனக்கு தெரியாம இங்க என்ன நடக்குது? யாருடி அவன்? உன்னை ஏன் அவன் கோவமா பாக்கணும்? எனக்கு தெரியாம லவ் எதும் பண்றியா என்ன?" என்று  தன் தோழியின் குரல் மாற்றத்தை கூட உணராமல் அவள் பாட்டிற்கு கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள்.. உடனே இலக்கியா, "அது ஒரு பெரிய கதை நான் உனக்கு அப்புறமா சொல்றேன்.. அங்க பாரு உன்னோட மில்கிபார் கூட வந்திருக்கிறார், சோ அந்த சொட்டை தலையன் சொன்னமாதிரியே இந்த மீட்டிங் சம்திங் இம்போர்ட்டண்ட் போல அதனால தொணதொணனு என்ன கேள்வி கேட்டு நச்சரிக்காம ஒழுங்கா மீட்டிங்க கவனிக்கிற வேலைய பாரு.." என்றெல்லாம் கூறி வித்தியாவின் கவனத்தை திசை திருப்பி அவளின் கேள்விக்கணைகளிடமிருந்து  தற்காலிகமாக தப்பித்துக் கொண்டால்..
  வித்தியாவின் மில்கி பார் அதாவது இந்த நிறுவனத்தின் எம்டி அர்ஜுன் பிரதாப்பும் இலக்கியா பார்த்துக்கொண்டிருந்த சந்தோஷும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய தோழர்கள்.. பள்ளிப்படிப்பை இருவரும் ஒன்றாகவே பயின்றனர். சில சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்லூரிப்படிப்பை ஒன்றாக இருவராலும் தொடர முடியவில்லை.. வெவ்வேறு ஊர்களில் இருவரும் இருந்தாலும் நண்பர்களின் நெருக்கம் குறையவில்லை. சந்தோஷ் தன் படிப்பை முடித்தபின் தானாக முயன்று தன் உழைப்பினால் தனக்கென  தனி ஒரு அடையாளத்தை மென்பொருள் துறையில் உருவாக்கி அத்துறையில் உள்ள பெரு நிறுவனங்களுக்கெல்லாம் போட்டியாக தன் நிறுவனத்தையும் உயர்த்தினான். அர்ஜுனுக்கு தன் சிறுவயதிலிருந்தே காவல்துறையில் சேர்ந்து தன் நாட்டிற்காக பணிபுரிய வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது.. அவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதாலும் அவரின் தொடர் வற்புறுத்தலின் காரணமாகவும் அவர்களுடைய தென்னிந்திய மென்பொருள் நிறுவன கிளையை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை விருப்பமில்லாமல் ஏற்றான்.. விருப்பமில்லாமல் ஏற்ற பதவியாக இருந்தாலும் தந்தையின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இந்த ஒருவருடமும் அயராது உழைத்தான்.. அதே சமயத்தில், தன்னுடைய நெடுநாள் கனவை நனவாக்குவதற்கு விடாமல் முயன்று கொண்டிருந்தான்.. "விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி" என்பதற்கிணங்க தன் முயற்சியால் இந்த ஆண்டு நடந்த ஐபிஎஸ் எழுத்துத் தேர்வில் வெற்றி கண்டு பயிற்சிக்காக செல்லவிருப்பதால் அவர்களுடைய நிறுவனத்தையும்  அவனுடைய தோழன் சந்தோஷிடமே பார்த்துக் கொள்ளும்படி ஏற்கனவே  கூறியிருந்தான்.. அதன்படி ஆபீஸில் உள்ள அனைவரிடமும் இந்தப் புதிய மாற்றத்தை பற்றி அறிவித்துவிட்டு அப்படியே அனைத்துப் பொறுப்புகளையும் சந்தோஷிடம் ஒப்படைப்பதற்காகவே இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்திருந்தான்.. ஆபீஸின் தலைமைப் பொறுப்பு மாறவிருக்கும் விஷயத்தை அனைவரிடமும் சொல்லிவிட்டு தன் நண்பன் சந்தோஷின் புகழையும் கொஞ்சம் பாடிவிட்டு அர்ஜுன் அந்த ஒலிபெருக்கியைசந்தோஷ் இடம் கொடுத்துவிட்டு தன் வேலை அனைத்தும் முடிந்தது போல் அவனுக்குரிய இருக்கைக்கு சென்று அமர்ந்துகொண்டான்.. இவ்வனைத்தையும் கேட்ட இலக்கியா விற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.. ஒரு முறைக்கு இரு முறையாக தன் தோழி வித்யாவிடம் இங்கு தான் கேட்ட அனைத்தும் உண்மைதானா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.. தன் தோழியின் செயல்கள் அனைத்தும் இன்று வித்தியாசமாக இருப்பதனால் வித்யா வெகுவாகவே குழம்பி போனால்.. எல்லாவற்றையும் பின்பு  பொறுமையாக கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி அங்கு நடப்பதை கவனிக்க லானால். இலக்கியாவிற்கோ சொல்லி விவரிக்க முடியாத அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. தன்னோட வாழ்க்கைல யாரஇன்னொருவாட்டி எப்படியாவது பாத்திர மாட்டோமான்னு நெனச்சிகிட்டிருந்தாலோ அவனே, அவலோட கண்ணு முன்னாடி நிக்கிறது மட்டுமில்லாம அவங்க கம்பெனிக்கும் எம்டி ஆக போறானு தெரிஞ்சதுக்கப்புறமா அவளால எப்படி சந்தோஷ படாமல் இருக்க முடியும்..
  இவல் யாரை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாலோ அதற்குரியவனது மனநிலை அதற்கு நேர் எதிராக இருந்தது.. கோபத்தில் அவனது மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.. அவனது கண்கள் இரண்டும் தீச்சுவாலை போல் காட்சியளித்தன.. அந்த அக்னிபிழம்பையொத்த கண்கள் இரண்டும் இவளையே எரித்து விடுவது போல் நோக்கிக் கொண்டிருந்தன.. அதனைக் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டால் இலக்கியா.. ஒலிபெருக்கியை தன் கையில் வாங்கிய சந்தோஷ் அங்கிருந்தவர்களுக்கு தன் காலை வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பேச தொடங்கினான்..

Dostali jste se na konec publikovaných kapitol.

⏰ Poslední aktualizace: May 31, 2020 ⏰

Přidej si tento příběh do své knihovny, abys byl/a informován/a o nových kapitolách!

உணர்ந்தேன் உன்னால்...!Kde žijí příběhy. Začni objevovat