Before we begin

265 17 6
                                    

அனைவருக்கும் வணக்கம்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் ஒரு நல்ல தொடக்கம் இருக்கவேண்டும் என்பதற்காக இக்கதையின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளேன். விரைவில் தேர்வுகளெல்லாம் முடிந்தபின்னர் 'அதர்ப்பெருநெறி' ரெகுலராக வெளிவரும்.

அதென்ன அதர்ப்பெருநெறி?

அதர்:: மக்கள் நடப்பதற்கான பாதை
பெரு:: பெரிய, நீண்ட
நெறி:: வழி, சாலை.

ஒரு பெரிய, நீண்ட சாலை என்று பொருள். சொல்லப்போனால், மெயின்ரோடு, இல்லைனா ஹைவேஸ். சரி, கதைக்கு ஏன் இந்தப் பெயர்? சொல்கிறேன். முதலில்...

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் சந்திக்கும் மனிதர்களோ, சூழ்நிலைகளோ, எடுக்கும் முடிவுகளோ, நம் வாழ்க்கையையே திருப்பிப் போடும் என்பது நமக்கு அச்சமயம் தெரிவதில்லை.

சில நேரங்களில், நாம் நமது வழக்கத்தை விடுத்து, புதுமையாக, மாறுதலாக, நம்மையறியாமலேயே ஒருசில செயல்களைச் செய்யும்போதும், அது நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பது புரிவதில்லை.

அவ்வாறு எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களே வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யம் தரும் என்பது என் கருத்து.

அதைப்பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு.

Self-awareness, awakening, life-altering decisions எல்லாம் நாம் பார்க்கும் பெரும்பாலான திரைப்படங்களில், ஒரு road-trip அதாவது, சாலைவழிப் பயணத்தில் தான் நடக்கும்.
உதாரணம்: ZNMD, Qarib Qarib Single, Piku, Karvaan, Paiya, etc.

அதற்குக் காரணம் உள்ளது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீரா?

பயணத்தின்போது, பழக்கமற்ற புதுமையான இடங்களும், மனிதர்களும் நம்மைக் கடந்து செல்வர். அப்போது, வழக்கமாக சிந்தனைச் சூழலிலிருந்து, மனது மாறுபடும், வித்தியாசங்களை நாடும், கோணங்கள் மாறும். அந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகளோ, பேசும் பேச்சுகளோ, செய்யும் செயல்களோ, நிச்சயமாக வழமை தவறித்தான் இருக்கும். வீட்டில் இட்டிலியும் தோசையும் போதும் என்பவர்கள், சாலைப் பயணத்தில் ரோட்டோரக் கடையில் பரோட்டாவை ஒரு கை பார்க்கும் காட்சிகளை நாம் கண்டிருப்போம். அதுபோலவே.

எனவே, நம்முடைய typical சென்னை ஆடவனான நாயகனும், ஒரு சாலைப் பயணத்தில் எப்படி மாறிப் போகிறான் என்பதையே இக்கதையின் கருவாகக் கொண்டு எழுதத் தொடங்குகிறேன்.

வழக்கமான கதைகளைத் தேடி இங்கே வந்திருந்தால், மன்னிக்கவும். இது அது அல்ல.

புரிந்துகொள்ளச் சற்றே சிரமமாக இருக்கும் புதுக்கவிதை போன்றது இக்கதை. ஆனால், ஒரு புத்துணர்ச்சியான வாசிப்புக்காக வந்தவர்களுக்கு, வந்தனம்! இது உங்களுக்கானது!

உலக அறிவு, பொருளாதாரம், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், அழகியல், உணர்வுகள், தொழில்நுட்பம், மருத்துவம், உளவியல், உணவியல் என்று பல்வேறு தலைப்புகளின் ஒரு அலசல் இருக்கும். கூடவே, கொஞ்சம் காதலும், பெண்ணியமும்(as always😉).

So, off to storytelling!!!

Love,
@Madhu_dr_cool.

Fb, Twitter, Insta, and Kindle as Madhu_dr_cool.

அதர்ப்பெருநெறிWhere stories live. Discover now