சுசி, மிகப் பிரபல நிறுவனத்தின் தலைமை விற்பனை மேலாளர். அவளைக் கண்டாலே 'ஜூனியர் 'களுக்கு குலை நடுக்கம்.
கணக்கு வழக்கில் படுகிறார் ஏதாவது தப்பு நடந்தால், படுசூடு.
இப்படித்தான், ஊழியர் உதயநிதி ஒரு தடவை ஏதோ பிரச்சினையும் உள்ளே நுழைந்தான்.
"இந்த சின்னப் பிரச்சினையை கூட எங்கிட்ட தான் கொண்டு வரணுமா நீங்கள் எல்லாம் எதுக்கு சம்பளம் வாங்குறீங்க? " என்ற படி எரிந்து விழுந்தாள், சுசீ.
உதயநிதி 'கப்சிப் ' பென இடத்தைக் காலி பண்ணினான்.
மறுநாள் - அலுவலகத்துக்கு உதயநிதி விடுப்பு சொல்லி விட்டு, நண்பன் ரவிரவியை பார்க்க கிளம்பி விட்டன்.
"ஒரு நிமிடம் இருடா... காப்பி போடுறேன் " என்று சமையல் அறைக்குள் நுழைந்தான் நண்பன்.
வெளியே கொஞ்சம் வேடிக்கைப் பார்க்கலாமே என பால்கனியில் இருந்து சுற்றுமுற்றும் பார்வையை சுழல விட்டன், உதயநிதி.
எதிரே இருந்த வீட்டில் ஒரு பெண் இரு சக்கர வாகனத்தை துடைத்துக் கொண்டிருந்த கட்சி அவன் கண்களில் பட்டது.
அப்போது -
"ஏய்... வெளியே நின்று என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க ? உள்ள வந்து சாப்பாடு போடு டி ..." என்று கத்தியபடி ஒருவர் வந்தார். நிச்சயமாக அவள் கணவர் தான் எனப் புரிந்து.
"இதோ வர்றேங்க..." என்றவள். அவசர அவசரமாக உள்ள போனாள்.
'ஐயோ ... இது சுசி மேடம் ஆச்சே? ' உதயநிதி வாய் பிளந்தது .
பெண் சிங்கமென அலுவலகத்தில் கர்ஜனை செய்து கொண்டிருக்கும் சுசீ மேடம் ? கலைந்த தலையும், அழுக்கேறிய நைட்டியுமாக ! அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை.
காப்பி தம்ளருடன் வந்த நண்பனிடம், ரவி. .. இது, என்னோட மேல் அதிகாரி சுசி மேடம் " என்றான், வியப்பு மாறாமல்.
"அப்படியா. ..? இங்கே அவங்க குடி வந்து 6 மாசம் தான் ஆகுது. புருஷன் ரொம்ப கொடுமை பண்ணுறான். காலனியில் இது எல்லாருக்கும் தெரியும்.
பாவம்டா அந்தப் பொண்ணு. சின்னச் சின்ன வேலைகள் கூட அவனுக்கு அவுங்க தான் பண்ணணும். கொஞ்சம் தவறினால் அடி -உதை தான். என்ன மனுஷன்?
ரவி சொல்லிக் கொண்டே போனான். அவை எதுவுமே உதயநிதியின் காதில் விழவில்லை.
அலுவலகத்தில் சுசியின் கடு கடுப்புத்தான் அவன் மனக்கண் முன் வந்து நின்றது. எத்தகைய முக மூடியுடன் வேலைக்கு வருகிறாள் என்பதை அப்போது உணர்ந்தான், உதயநிதி.
YOU ARE READING
முகமூடி முகங்கள்
Short Storyரொம்ப நாளாச்சு சிறுகதை எழுதி, திரும்ப எழுதி இருக்கேன் எல்லாரும் படிச்சு பார்த்து சொல்லுங்க பிரண்ட்ஸ்