அப்படி ஒரு பரிசளித்த அவளை எவ்வாறு மறக்க இயலும்.
முதல்.... "காதல்"
தலையெல்லாம் நரைத்தாயினும்,
கால்கள் மூன்றாயினும்,
கன்னம் சுருங்கினும்,
கண்பார்வை மங்கினும்,
நினைத்தாலே இனிக்கும் என்ற இன்ப பழமே...!
முதல் காதலின் நினைவுகள்.
அந்த பழத்தின் சுவை அமிர்தத்தையும் மேலோங்கி நிற்க்கும் என்பது உண்மை.அப்படியெரு நினைவு எல்லோருடைய மனதிலும்
"பசுமரத்தாணி போல் பதிந்து" இருக்கும் என்பதும் உண்மை.இவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவளை மறக்க இயலும் என்பதை புரிந்து கொள்ளாமல்,
"காதலும் கடந்து செல்லும்
காலமும் பதில் சொல்லும்"என்ற பதிலை கூறி அவளோ விடைபெற, நானோ...!!
விடை தெரியாமல்
காலத்தின் கட்டாயத்தால்
வாழ்க்கையை நோக்கி பயணிக்க நேர்ந்தேன்.என் பெயர் சுந்தர் வயது 25
வயதுக்கேற்ற வேலை கிடைக்காமல் திண்டாடிய நிலையில் வாடினேன்.காதலில் தோற்ற நான்
வாழ்க்கையிலும் தோற்றுவிடுவேன் என்ற பயம் வரத்தொடங்கியது.செல்லுமிடமெல்லாம் நிராகரிப்பு.
வேலையின்மை-யின் தாக்கமும்,
வாழ்க்கை-யின் நோக்கமும்,
பசியின் மயக்கமும் எனக்கு புரியத் தொடங்கியது.
முயற்சியை கைவிடாமல்
அடுத்த நிராகரிப்பிற்கு நகர்ந்தேன்.வாடிய மருக்கு மாரி பெய்தாற்போல்
ஒரு நிறுவனத்தில்
கிடைத்த வேலையை பிடித்து
செய்தேன்.Sidhu.