"என்னடீ வீடே மணமணக்குது!!! பிப்ரவரில பண்டிகைனு எதுவும் இல்ல!! என்ன விசேஷம்?!"
"அது ஒன்னுமில்ல! காலைலேர்ந்து படிக்கரா, அதுனால உங்க பொண்ணுக்கு வாய் அலையுதாம். sweetஆ எதாவது சாப்பிடணுமாம்! அதான் அல்வா கிண்டரேன்!"
"என்ன! தீபா ஓயாம படிக்கராளா? இது நீ கிண்டர அல்வா விட பயங்கரமான விஷயமா இருக்கே!!"
"எப்ப பாரு நக்கல் உங்களுக்கு! காலைல எடுத்த History bookஅ கீழ வெச்ச பாடில்ல!"
"அக்கா! என்ன அம்மா support ரொம்ப overa இருக்கே! History படிக்கிறியாம்!" திவ்யா நக்கலடித்தாள்!
"ஆமா! Technically நான் history தானே படிக்கறேன்!"
"ஆமாமா!! மூன்றெழுத்து விரல் நடிகரின் முந்திய காதல் தோல்விகள் தான் அடுத்த மாசம் exam ல கேப்பாங்க!" என்றபடி தீபாவின் History bookக்குள் இருந்த குமுதத்தை உருவினாள் திவ்யா!
YOU ARE READING
கவளம்!
Short Storyகவளம்: ஒரு பிடி அளவுக்கு சில குட்டிக்கதைகள்☺️ PS:All the cover images are from google.