90s kid payyan இன்ஜினியரிங் முடிச்சா என்னல்லாம் நட்க்குமோ அதோட சேத்து சின்னதா ஓரு லவ்வயும் தெகட்டாம சொல்லப்போறேன்
ஓரு லவ் ஸ்டோரி.........
இதுல இருக்குற கதாபாத்திரம்,நான் இல்ல நாம
என்ன சரியா? அப்புடி நினனசிக்கிட்டே கதைக்குள்ள போவோம்
நம்மலோட கதாபாத்திரம் இதுல சரியான பால்வாடி, காலேஜ்ல ஃபர்ஸ்ட் பென்சு, பொன்னுங்க பக்கமே திரும்பாத 90s kid payyan தான் நாம
நாம படிப்ப முடிச்சதும் பட்டம் வாங்கிட்டு இருக்குற ஏரியாலயே எதாவது வேலைபாக்கலாம்னு யோசிக்கும் போது, கடைசியா புக்கு கடைலயே வேலைகிடைக்குது
இதுல நல்ல விஷயம் என்னன்னா?
முதலாளி காசு வாங்க தான் வருவாரு அதுவும் கடைய சாத்தும் போது
ஏன்னா?
அவருக்கு இந்த கடைமாறி நிறையா (கடை) தொழில் இருக்கு;;;
இருந்தாலும் நம்மல நம்பி ,நம்மகிட்ட பொருப்ப ஒப்படைக்கிறாருன்னா காரணம் என்னவா இருக்கும்?
ரொம்ப யோசிக்காத நண்பா
பதில் என்னன்னா, நம்ம முகராசி தான்அதான்,,பால்வாடி கலை தாண்டவம் ஆடுதே
அதுனால நமக்கு வேலைல தொந்தரவு இருக்காது;;;
இருந்தாலும்
மருபடியும் அதே பால்வாடி life , start ஆகுதோன்னு நினைக்கும்போது
கூட வேலை பாக்குற பொண்ணு பேரு பாரதி, அறிமுகமாகுது......பாரதி பத்தி சொல்லனும் நா (மூணு நாளுலையே நல்லா பழகுற அக்மார்க் Friend) அதுனால நாம நல்லா நண்பர்கள் ஆய்ட்டோம்
அப்படியே நாள் மாசக்கணக்கா ஆகும் போது வேலை நேரம் தவிற மத்த நேரம் வீட்டு கதைன்னும், கொண்டு வந்த சாப்பாட sharing னு தொடருது நட்பு.............
திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு சரியா சொன்னா பாக்குறதுக்கு மணி காராமுந்தி மாதிரி, மெல்லமா நடந்து வந்து நம்ம பாரதிக்கிட்ட ஏதோ கேக்குது,