அன்று

168 18 61
                                    

காட்டின் அமானுஷ்ய அமைதியை மெதுமெதுதாய் தன் காலடி ஓசையால் கலைத்து அடி எடுத்து வைத்து கொண்டிருந்தான் அமர் .. 

தொலைவில் தெரிந்த தெரு விளக்குகளும் மின்னி மின்னி மறைந்து அவன் தலை மறைந்ததும் தனிச்சையாய் ஓளி மறைந்து உறக்கத்தில் தள்ளப்பட எந்த ஒரு எடக்கு மடக்குமின்றி தன் நடையை தொடர்ந்த அமர் தன் பின் கேட்ட வேறு ஒரு காலடி ஓசையில் திடுக்கிட்டு நின்றான்..

சுற்றி எங்கிலும் மரங்கள் அடர்ந்து வெளிச்சமும் வர விடாது இருளை பூசி கொண்டிருக்க நிலவவனோ எப்போதோ தன் வேலையை முடித்து மறுவேலை பார்க்க எதிர் திசையில் சென்றிருந்தான்...

அமரின் கோலி குண்டு கண்கள் அங்குமிங்கும் நடனமாட தொண்டையில் எச்சிலை கூட்டி விழுங்கியவன் திகில் கலந்த பார்வையை சுற்றி சுழல விட்டு ஓரடி முன்னோக்கி எடுத்து வைத்தான்...

அவன் பின் முன்பை போலவே மீண்டும் ஒரு காலடி ஓசை தெளிவாய் கேட்க அமரின் இதயத்தில் பயபந்து மெதுமெதுவாய் உருள தொடங்கியது... பேய் கதைகளில் உள்ளவை போல் பின் ஒரு சத்தம் கேட்டால் எவனுக்கு தான் பயமிருக்காது

ஆயிரம் தான் இருந்தாலும் அம்மாவின் " நடுஜாமத்துல போனா காத்து கருப்பு அண்டீரும் சாமி .. காத்தால பொய்க்களாம் யா " என்ற சொல்லை மீறி மதுரை வீரன் கணக்காய் வந்தது தவறு தான் என புத்தி முழக்கமிட்டது..

இப்போது புலம்பி பிரயோஜனம் இல்லை என மனம் சத்தமிட வேறு வழி தேடி கண்கள் அலைபாய்ந்த நேரம் அவனின் செவி அருகில் அதிக சத்தத்துடன் அவன் கழுத்தை தீண்டியது அந்த மூச்சு காற்று..

ஒரு நொடி கண்களை நான்கு மீட்டர் அகல விரித்த அமர் மெதுவாய் தலையை மட்டும் திருப்பி பார்க்க கோரமாய் கத்தி கொண்டு அவன் மீது பாய்ந்தது ஒரு திகில் முகம்...

அம்மா என அலரி கொண்டே கீழே விழுந்த அமர் பதறி போய் கண்களை திறக்கவும் அவன் முன் இருந்த அந்த பயமுறுத்தும் முகம் எங்கோ காணாமல் போயிருந்தது...

You've reached the end of published parts.

⏰ Last updated: Sep 26, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

திகிலிரவுWhere stories live. Discover now