1. வீழ்ச்சியிலும் நிதானம் முதன்மை

3.9K 37 1
                                    

அடர்நீல வண்ணம் தீட்டி சிறு சிறு துகள்களாக எஞ்சிய வெண்ணிற மேகக்கூட்டங்கள் தன்னோடு கருமை சேர்த்து கொஞ்சி விளையாடிய அதே வேளையில் முத்துக்களாய் நீரை ஏந்தி மண்ணிலே கொண்டு வந்து சேர்த்தது. மலைகளின் வளைவுகளுடன் இக்காட்சியும் பிரம்மிப்பூட்ட திளைத்து இருந்தது கொடைக்கானல். இயல்பிலேயே அமைதி கொண்ட அந்த மண்ணின் அழகில் சிறு துளி கூட பொருந்தாத வண்ணம் படபடப்போடு காணப்பட்டான் இனியன்.

10 வயதிலேயே தந்தைக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நுட்பமான அறிவு படைத்த அச்சிறுவன் இன்று ஆறடி உயரத்தில் தெளிந்த அறிவோடு விழிகளிலேயே பார்ப்பவரை ஆச்சரியப்படுத்த வல்லவன். இத்தகைய தோற்றமோ பார்வையோ அவனை ஒரு நிலையில் பார்க்க வைக்க தாயின் வளர்ப்பில் கனிவின் உருவமாய் இருந்தான். தாய் சௌர்ணிகா தான் அவனின் பலவீனம் என்று கூட சொல்லலாம்.

அப்படிப்பட்ட மகனை ஈன்ற அவளோ கனிவான பார்வையும் எல்லையில்லா அன்பை வாரி வழங்கும் தன்மையும் பெற்று காணப்பட்டார். அவரை விரும்பியே மணந்தார் தொழிலதிபர் விஸ்வநாதன். விஸ்வநாதன் மட்டுமே எஸ் வி டெக்ஸ்டைல்ஸின் மூன்று பிரான்ச்களை கவனித்துக்கொள்கிறார். சௌர்ணிகாவோ தொழிலில் நேர்த்தியாக செயல்பட்டு அவரது மேற்பார்வையில் 2 ஸ்டீல் தொழிற்சாலைகளை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கிறார். இனியன் தன் முயற்சியில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி தொடங்கி எஸ்வி கன்ஸ்ட்ரக்ஷன் என்று துறையில் ஓரளவு நல்ல பெயர் பெற்றிருந்தான்.

இந்த நிலையில் இதுவரை ஏற்படாத அளவு பெரிய வீழ்ச்சியை தொழிலில் தன் நண்பன் மூலமாகவே சந்திக்க நேர்ந்தது இனியனுக்கு. அலுவல் ரீதியான முக்கிய தகவல்களை அவன் பொதுவாகவே யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. இப்படியிருக்க தன் திறமையின் முழுவீச்சை நிரூபிக்கும் வகையில் யுகன் கம்பெனி டெண்டரை எடுக்க எண்ணினான். அதில் தான் சம்பாதித்த தொகையின் 50 சதவீதத்திற்கும் மேல் முதலீடாக செய்திருக்க அவன் கைசேரும் வேளையில் சில முக்கிய தகவல்களை வேறு ஒரு கம்பெனி கைப்பற்றியிருந்தது. அதுவும் அது தன் நண்பன் ரவியால் என அறிந்தபோது அவன் மனம் சுக்கு நூறானது. வெறும் பணத்திற்காக விலைபோன அவனை நினைக்க நினைக்க மனம் எல்லையில்லா ஆத்திரம் கொண்டது.

மனதை தீண்டி செல்லாதேWhere stories live. Discover now