அத்தான், கொஞ்சம் வளருங்க. இப்பல்லாம் கிண்டர் கார்டன் குழந்தைங்க கூட லீவுக்கு பெட்டரான ரீசன் சொல்றாங்க. காலேஜ் லெவல் கேர்ள்ஸ் கிட்ட போய் குட்டிப்பாப்பா மாதிரி லீவ் போட காரணம் சொன்னியா ன்னு கேக்கறீங்க......அதெல்லாம் தேவையே இல்ல. நான், இனியா எல்லாம் படுத்துக்கிட்டே பாஸாகிடுவோம். ரெண்டு பேரும் அவ்வளவு ஜீனியஸாக்கும்!" என்று சொன்ன ஷைலஜாவிடம்,
"ரிசல்ட் வரட்டும்! அப்புறம் பேசுங்க உங்க பெருமையெல்லாம்; காலேஜ்ல இருந்து ஏதாவது கம்ப்ளைன்ட் வந்தது, மாமா தான் வந்து நிக்கணும். தெரியும் ல?" என்று மிரட்டியவனிடம்,
"அதெல்லாம் தெரியும் தீக்கோழி! நீ நிமிர்ந்து பார்த்து ரொம்ப நேரம் ஆச்சு, மண்டைய லேப்டாப்க்குள்ள விட்டுக்க; எங்களுக்கு வேற வேலை இருக்கு!" என்று பழிப்பு காட்டிய ஷைலஜாவிடம்,
"உனக்கு வாய் ரொம்ப கூடிப் போச்சு.....இரு உன்னை வச்சுக்கிறேன்!" என்று கோபத்துடன் சொன்னான் பார்கவ்.
"அத்தான் உனக்கு ஓகேன்னா எனக்கு ஒண்ணும் இல்ல. பட் கட்டிக்குறதுக்கு, பெட்டா வச்சுக்குறதுக்கு உன்னை விட பெட்டர் சாய்ஸா எனக்கு யாரும் கிடைக்க மாட்டாங்களா என்ன?" என்று கேட்டவளை முகச்சுளிப்புடன் அதட்டிய இனியா, "ஸாரி அத்தான்! ஷைலு தெரியாம பேசிட்டா! அவளுக்கு பதிலா நான் ஸாரி கேட்டுக்கறேன்!" என்றாள் சிறு புன்னகையுடன்.
"பரவாயில்லை டா லட்டு, உன் ப்ரெண்டை கொஞ்சம் ஒழுங்கா இருக்க சொல்லு. வேற யார்ட்டயும் இப்படி எல்லாம் பேசக்கூடாது ஷைலு! தப்பா எடுத்துக்க சான்ஸ் குடுக்காம பேசப் பழகு!" என்று சொல்லி விட்டு அமர்ந்து கொண்டான்.
ஜெய் நந்தன் சமையல் அறை வாசலில் சென்று நின்று கொண்டு உரத்த குரலில்,
"ஏஞ்சல் இப்போ என்ன உனக்கு விளையாடணும் அவ்வளவு தானே? யுனிக் திங்க்கிங் ன்னு ஒரு கேம் சொல்லுவியே....அத விளையாடலாம்! நீ தான் எப்பவுமே அந்த கேம்ல ஜெயிப்ப ல்ல....மாமாவும் கேமுக்கு வர்றேன். வெளியே வாடா!" என்று அழைத்து வந்து ஹாலில் பேப்பர், பேனா சகிதமாக அமர்ந்து விட்டார்.