ஹாய் வட்டீஸ்,
முதலில் மன்னிப்பு கேட்டவனாக. தினமும் ஒரு அப்டேட் எழுதி இந்த கதையை வெகு சீக்கிரத்தில் முடித்துவிடுவேன் என்று ப்ராமிஸ் செய்துவிட்டு, அதை நிறைவேற்ற முடியவில்லை. கதையின் முதல் 21 அப்டேட் அப்படித்தான் எழுதினேன். அதன் பிறகு ஆசியா கோப்பை, உலகக்கின்ன டீ டுவன்டி, பிபா 2022 என்று எனது நேரம் எல்லாம் விளையாட்டிலேயே போய் விட்டது.
இனிமேல் இந்த கதையை தொடரும் எண்ணம் எனக்கில்லை. இப்படி சொல்வதை விட இனி எழுதும் எண்ணமே எனக்கு இப்போதில்லை. கடவுள் அருளால் 2024 நடுப்பகுதியின் பின் உயிரோடு இருந்தால் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன். இல்லை என்றால் அவ்வளவுதான்.
நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் எல்லாம் இல்லை. எழுத்துப்பிழைகளும், ஆயிரம் சொற்பிழைகளும் கொண்ட சாதாரன அமெச்சூர் எழுத்தாளன் தான்.
என்னுடைய முற்றுப்பெற்ற ஏழு கதைகள் உள்ளன. ஒரு கதை பாதியில் நிற்கின்றது. இன்னுமொரு கதை 3 அப்டேட் எழுதி வாட்பெட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த கதை " ஆகாஷனா". ஏனோ தெரியவில்லை இவை எல்லாம் கூற வேண்டும் என்று தோன்றியது.
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Good Bye wattpad and My dear watties.