கோபமாக உள்ளே நுழைந்தவனின் கண்கள் அமர்ந்திருந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் மெல்லக் கனிந்தது.
தற்பொழுது வரை அவளின் மேலிருந்த கோபம் கூட சற்றே எட்ட நின்று வேடிக்கை பார்த்தது...
விழிகளை நிறைத்த சிரிப்போடு மனைவியை நெருங்கினான். அள்ளிக் கொள்ளும் அழகு இல்லை அவனின் மனைவி, ஆனால் அவளை மொத்தமாய் அள்ளிக் கொள்ளத் துடித்தது பூபதிக்கு.
மாயோனின் கண்களுக்கு அவன் மனைவி பேரழகியாய் தெரிந்தாள். மெல்ல மனைவியை நெருங்கியவன் உதட்டில் மலர்ந்த புன்னகையோடு மனைவியின் கேசத்தைக் கோதிக் கொடுக்க பாவை நெளிந்தாள்.
"ஓய் நிலவே..." அவளின் செல்லப் பெயருக்கு வலிக்குமோ என்னும் அளவிற்கு மெல்லமாய் அழைத்தான். கணவனின் குரல் அவளின் செவியைத் தீண்டியதோ என்னவோ மங்கையின் இதழ்கள் சிரிப்பில் வளைந்தது...
மனைவியின் சிரிப்பை ரசித்தவன் "இனியா எழு, பெட்ல படு..." எப்போதும் போலக் கடுமையாகத் தான் கூற நினைத்தான் ஆனால் அவனையும் மீறி குரல் மென்மையாக ஒலித்தது.
"இனியா..." மற்றொரு முறை சத்தமாக அழைத்தான். தற்போது திடுக்கிட்டு விழித்தவள் எதிரில் நின்ற கணவனைப் பாவமாகப் பார்த்தாள். அவனோ கைக்கட்டி புருவங்களை உயர்த்தி பெண்ணை முறைத்தான்.
வழக்கம் போலவே கணவனின் உடல் மொழி அவளுக்குக் கோபத்தைக் கொடுத்தது. ஏற்கனவே அவன் அறைக்கு வரவில்லை என்ற கோபத்திலிருந்தவளுக்கு இப்போதைய கோபமும் சேர்ந்து கொள்ள "என்ன..." என கேட்டவளின் வார்த்தைகளில் அனல் பறந்தது.
மேலும் படிக்க கதை பிடித்திருந்தால் ரேட்டிங் குடுங்க, ரிவ்யூ குடுங்க... அப்படியே புவனா மாதேஷ் ஆத்தர் பேஜ ஃபாலோ பண்ணுங்க
https://www.amazon.in/dp/B0D4MCVXBX