பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி உங்கள் வீட்டில்!
பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!
உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!
கதிரவனின் கருணைக்கு நன்றி கூறி
கரும்பு மென்று கவலை மறந்து
தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட என் இனிய பொங்கல் வாழ்த்துகள்
உங்களுக்கும் , உங்கள் குடும்பத்துக்கும்