ஹாய் பிரண்ட்ஸ்
அனைருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இன்னும் சில நேரங்களில் முடிய இருக்கும் இந்த 2019ம் வருடம் என் வாழ்க்கையில் சில நல்லதும், கெட்டதும் கலந்தே இருந்த வருடம்
போலியான உறவுகளை நான் அடையாளம் கண்டதும் இந்த வருடத்தில் தான்... அவர்களால் நான் பாதிக்கப்பட்ட போது... என்னை மீட்டெடுத்தது எழுத்து மட்டும் தான்.
என்னுடைய கவலைகள் என் மனதை விட்டு நீங்குவதற்கு மிகவும் பேருதவியாக இருந்தது என்னுடைய கதையும், அதை படித்து விட்டு எனக்கு கமெண்ட் செய்து என்னை ஊக்கம் அளித்த நீங்கள் தான்.. நான் என்னுடைய கதையை தொடர்ந்து எழுதுவதற்கு காரணமான உங்களோடு இந்த புது வருடத்தை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதுவரைக்கும் அளித்த தங்களின் ஆதரவை வரப்போகும் புது வருடத்திலும் தொடர்ந்து அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்