வாசகர்களுக்கு வணக்கம் !
அனைவரும் நலமென்றே நம்புகிறேன். வெகு நாட்களுக்குப் பின் மகிழ்ச்சியான செய்தியோடு வந்துள்ளேன்.
எத்தனை தூரம் சென்றாலும் இத்தள வாசகர்களையும் தோழர்களையும் மறக்க இயலாது. இவ்வாசகர்கள் எப்போதும் என்னன்பிற்கும் மதிப்பிற்கும் உடையவர்கள், ஆகையாலே என் மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்கிறேன்.
விழியின் மொழியும் மற்ற என் கதைகளும் mallikaamanivannan.com தளத்திலும் அமேசான் கிண்டிலிலும் கிடைக்கப்பெரும். சில காரணங்களால் என்னால் இங்கு தொடர்ந்து எழுத முடியாது போன போதும், என் வாசகர்களுக்காக அவ்வப்போது கிண்டிலிலில் புத்தகங்களை இலவசமாகவும் தருகிறேன்.
மேலும் புதிய முயற்சியாக ஆடியோ நாவலாகவும் பதிவு செய்துள்ளேன்.
https://youtube.com/channel/UC1Gp-m_2EWWAykBqd35P12Q
Mithra Novels எனும் யூடூப் சேனலில் புதிய கதை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. கேட்டு, Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
நெஞ்சிலாடும் நேசப் பூவே இக்கதை அருண் பதிப்பகத்தின் மூலம் தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு நன்றிகள்!
பிருத்வி- இலக்கியா, இளங்கோ- ஜோதி இந்த ஜோடிகளின் காதலையும் காமெடியையும் வாசித்தவர்கள் மறந்திருக்க இயலாது. இல்லாதவர் தற்போது வாசித்து தெரிவிக்கவும்.
நன்றிகளும் அன்புகளும்,
மித்ரா
For Books : Arun Publication, marinabooks.com, wecanshopping.com, udumalai.com