தமிழின் மீது கொண்ட பற்றினாலும், அதன் மீது உள்ள கர்வத்தினாலும் எனக்கு தெரிந்த தமிழின் மூலம் இலக்கணம் பாராமல் இங்கு எனது மனதில் எழும்  உணர்வுகளை வார்த்தைகளால் தங்களுக்கு தர இருக்கின்றேன்.... பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும் தோழர் தோழிகளே....

என்னுடைய தோழி கூறியதன் மூலம் என்னுடைய சில வரிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்....

என்னை பற்றியும் நான் இருக்கும் இடம் பற்றியும் சில வரிகள்

எனது பெயர் ரவிச்சந்திரன், எனது ஊர் தமிழ்நாட்டில் உள்ள விவசாய மக்களுக்கு கண்டிப்பாக தெரிந்த ஊர் காவிரி ஆற்றின் தொடக்கமான மேட்டூர் என சொல்லப்படும் மேட்டூர் அணையே ஆகும். மேட்டூர் அணை ஆனது காவிரி ஆற்றை மட்டும் கொண்டது அல்ல அழகிய மலை தொடர்கள் மட்டும் அழகிற்கே எடுத்துக்காட்டு போல இருக்கும் இடம் ஆகும்....

இனி என்னை பற்றி கூறுகிறான்... சொல்ல சிறப்பான விஷயங்கள் இல்லை என்றாலும் என்னுடைய குணங்களை பற்றி கூற இருக்கிறேன்.....

வாழ்க்கையில் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும், அந்த சந்தோசம் மற்றவர்களின் சந்தோசத்தின் மூலமாக இருந்தால் நான் அதிகம் சந்தோசம் அடைவேன்..... மற்றவர்களை முடிந்தவரை எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் என்னுடன் இருப்பவர்களை சந்தோசம் அடைய செய்ய வேண்டும் என்பது எனது கொள்கையும் கூட.... அறிவே ஆயுதம் என்பது எனக்கு பிடித்தமான ஒன்றாகும்..... மனம் சொல்வதை மட்டுமே என்றும் கேட்டு நடக்க பிடிக்கும்.... யாரை நம்பா விட்டாலும் நம் மனதை என்றும் நம்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன்.....

மற்றவர்களுக்கு உதவி செய்ய மிகவும் பிடிக்கும்.... என்னை ஏளனமாக பேசினாலும் என்னிடம் உதவி என்று கேட்டால் செய்வது தான் என்னிடம் உள்ள நல்ல குணம் என்று நினைக்கின்றேன்.... வாழ்க்கை வாழ்பவருக்கே....

நன்றி....
  • Salem
  • Sumali noongOctober 24, 2017



Huling Mensahe
ravicare4u ravicare4u Apr 14, 2020 05:46AM
வாழிய செந்தமிழ்!வாழ்க நற்றமிழர்!வாழிய பாரத மணித்திரு நாடு!தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. ❤️
Tingnan ang lahat ng mga usapan

Mga kuwento ni Ravichandran A
என் உணர்வுகளின் நிழல் (*.*) ni ravicare4u
என் உணர்வுகளின் நிழல் (*.*)
அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள...
My Photos ni ravicare4u
My Photos
சும்மா தான் இதை கிரேட் பண்ணேன்... யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல என்பதனை புன்னகையுடன் தெரிவித்து கொள்கிறேன்...
முதல் (அறியாத) காதல் (அன்பு) ni ravicare4u
முதல் (அறியாத) காதல் (அன்பு)
இது எனது முதல் கதை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...... இந்த கதையின் கரு ஆனது ஒருவனின் வாழ...
5 Mga Reading List