நம்ம பக்கத்து வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்து இருக்கிறாங்களே அவங்க யாருன்னு தெரியுமா என்று கேட்டுக்கொண்டே அறையிலிருந்து வந்தான் ஆதித்யா
நம்ம பக்கத்து வீட்டு ஜெயஸ்ரீ இருக்கால அவங்க சித்தி பொண்ணு இண்ணைக்கு வருவான்னு சொன்னா அந்த பொண்ணா தான் இருக்கும். அது இருக்கட்டும் எதுக்கு இப்போ நீ இவ்வளவு அக்கறையா கேக்குற.
என்று ஆதித்யாவை மேலும் கீழும் பார்த்தவாறு கேட்டார் பார்வதி.பெரியம்மா பொண்ணா சித்தி பொண்ணான்னு நான் கேக்கலம்மா. அந்த பொண்ணு யாருன்னு தெரியுமான்னு தான் கேட்டேன்.என்று ஆதித்யா கேட்க
அந்த பொண்ண 7 இல்ல 8 வருசத்துக்கு முன்னாடி பாத்துருப்பேன் முகம் கூட நியாபகம் இல்லை. என்றார் பார்வதி
அப்டியா நீங்க நான் அப்பா எல்லாம் தினமும் 8 மணிக்கு ஒரு சீரியல் பாப்போம்ல அந்த சீரியல் எழுதுறதே இந்த பொண்ணுதான். ஜெயஸ்ரீ அக்கா கூட சொல்லி இருக்காங்கம்மா என்று ஆதித்யா சொல்லவும் பார்வதி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
அப்டியா உண்மையாவா.தம்பி வாடா நம்ம இப்போவே போய் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு வந்துருவோம். ஹீரோக்கும் ஹீரோயின்க்கும் வேற ஏதோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு நம்ம அந்த பொண்ணுகிட்ட குடும்பம்ன்னா ஆயிரம் இருக்கும் அதுக்காக புருஷன் பொண்டாட்டிய இவ்ளோ நாள் பிரிச்சி வைக்க கூடாதுன்னு சொல்லி அறிவுரை சொல்லிட்டு வருவோம் வா. என்று தன்னை அழைக்கும் அம்மாவை பாவமாக பார்த்தான்.
அம்மா நீ எல்லாம் மாமியார் ஆனா சண்டை கூட போட மாட்டம்மா போர் அடிக்கும் வீட்ல. என்று சொல்லிவிட்டு அவன் நக்கலாக சிரிக்க
டேய் என்னடா நீ சிரிக்கிற. வீட்டுக்கு வர்ற பொண்ணு கூட எப்படி சண்டை போட முடியும். அதுவும் இல்லாம நீ உன் அண்ணன் அப்பான்னு எல்லாரும் ஒண்ணாவே இருப்பிங்க பேசுவீங்க நான் மட்டும் தனியா இருப்பேன்.அதுவே மருமக வந்தா அவ கூட பேசிட்டு ஜாலியா இருக்கலாம் அப்போ போர் அடிச்சிச்சின்னா நானும் என் மருமகளும் சேர்ந்து உங்ககூட சண்டை வர்றோம் போதுமா. என்று கூறும் அம்மாவை விழிகள் விரித்து பார்த்தான்.
YOU ARE READING
சட்டென்று மாறுது வானிலை (completed )
Short Storyஎனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு குட்டியா கியூட்டா ஒரு காதல் கதை எழுதணும் அப்டின்னு. அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சப்போதான் இந்த கதை எழுதினேன். ரொம்ப பெரிய கதை எழுதாம ஒரு 10 நிமிஷம் படிக்கிறவங்க சந்தோசமா சிரிச்சிட்டே படிக்கணும்னு நினைச்சு எழுதுன கதை. எனக்க...