சூரிய காந்தி

251 46 5
                                    

பார்ட் 3

இதுவரை : km know about each other

இனி :

மாயன் 3 மணி அளவில் lib ஐ மூடி விட்டு, முல்லையின் பரிசை எடுத்து கொண்டு கதிர் வீட்டிற்கு சென்றான்..

Lak உறங்கி கொண்டிருக்க, dm அவர்கள் அறையில் ஒயிவு எடுக்க ஹாலில் ஜீவா, கண்ணா, கதிர் மட்டும் அமர்ந்திருந்தனர்..

M: கதிர் என்ன பண்றீங்க

K:வாங்க அண்ணே

M: ம்ம்

J: எப்படி இருக்கீங்க அண்ணே

M: நல்லா இருக்கேன் டா

Ka: வாங்க அண்ணே சாப்பிடலாம்

M: இன்னும் சாப்பிடமாய, நான் சாப்பிட்டாச்சு டா, நீ இன்னும் சாப்பிடலையா

J: already 2 time சாப்பிட்டாச்சு, உங்களை சாக்க வெச்சு இன்னொரு time சாப்பிட plan போடறான் னே

M: சிரிக்க

K: அம்மா அண்ணி எல்லா தூங்கறாங்க, இருங்க tea போட்டு எடுத்துட்டு வரேன்

M: அதெல்லாம் வேணாம் டா

J to k: நீ பேசிட்டு இரு டா, நான் போட்டு எடுத்துட்டு வரேன் என சொல்லி ஜீவா சென்று விட

M: இந்த டா, இது உனக்கு தான் என சூரிய காந்தி செடியை தர

K: எனக்கு எதுக்கு னே

M: நான் தரல டா, முல்லை

K: அண்ணே எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் தலை ஆட்ட

Ka: என்ன முல்லை

K: அது நான் முல்லை கொடி கேட்டேன், அதான் தான் அண்ணன் சொல்லுது

Ka: ம்ம் doubt ah இருக்கே

K: நீ போய் snacks எடுத்துட்டு வா, அண்ணனுக்கு..

Ka: ம்ம் சரி, நானும் எடுத்துப்பேன்

K: ச்சி போ

M: இவனோட கஷ்டம் டா

K: இப்ப சொல்லுங்க னே

M: முல்லை கொடுத்துச்சு டா, நீ நல்லா படிக்க வாழ்த்துக்கள் சொல்ல சொல்லி இதை கொடுத்துச்சு..

K: மிகுந்த சந்தோசத்தோடு வாங்கி கொண்டான்

M: சரி டா, நான் வரேன்

K: இருங்க னே, tea யாவது குடிச்சுட்டு போங்க

சரியாக ஜீவா, கண்ணன் வர மாயன் tea குடித்துவிட்டு சென்று விட்டார். கதிர் அந்த செடியை எடுத்து கொண்டு பின் பக்கம் போய் ஆர்வத்தோடு நட்டு வைத்தார்..

மாயன் 12th படிக்க தேவையான விஷயங்களை சேகரித்தார். அடுத்த ஞாயிறு கதிர் lib வர விஷயங்களை சொல்ல, fees எப்படி கட்டுவது என யோசித்தான். மாயனிடம் எதுவும் சொல்லாவிட்டாலும் மாயனுக்கு புரிந்து விட்டது...

கொஞ்ச நேரம் புத்தகங்களை படித்தவன் fees பற்றியே யோசித்ததால் வார மலர் பற்றிய எண்ணம் எழ வில்லை. மாயனிடம் விடை பெற்று சென்று விட்டான்..

கதிர் செல்லவும் முல்லை வரவும் சரியாக இருந்தது. முல்லை எழுதிய "ஆழிலை நடனம்" எனும் சிறு கதைக்கு முதல் பரிசாக 1000ரூபாய் கிடைத்தாக சொல்லி மாயன் பரிசு தொகையை தந்தார்...

முல்லை அதை பெற்று கொண்டு எப்போதும் போல சில புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தாள், சற்று நேரம் கடந்த நிலையில் மேசை மீது மாயன் தந்த admission பற்றிய பேப்பர் இருந்ததை கண்டு மாயனிடம் கொடுத்து, அதை பற்றி கேட்க மாயன் விஷத்தை சொன்னார்..

முல்லை சற்று யோசித்து விட்டு கையில் இருந்த 1000 ரூபாயை மாயனிடம் குடுத்து கதிருக்கு books வாங்கி குடுக்க சொன்னாள். மாயன் மறுத்ததும்

மு : அண்ணே படிப்போட அருமை எனக்கும் தெரியும் னே, என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா, please னே என்னால தான் படிக்க முடில, ஒருத்தர் படிக்க என்னால எதாவது செய்ய முடியும் னா எனக்கு அது ரொம்ப சந்தோசம் னே, இதை வாங்கிக்கோங்க என கொடுத்து விட்டு சென்று விட்டாள்...

வீட்டிற்கு சென்ற கதிர் யோசனையுடன் பின் பக்கம் செல்ல அங்கே இருந்த சூரியகாந்தி செடியை பார்த்ததும் முல்லை நியாபகம் வர, அப்போது தான் வார மலரை படிக்க வில்லை என்ற நினைவு வந்தது. அவசரமாக சென்று மணியை பார்க்க கடிகாரம் 3 மணியை காட்ட நொந்து கொண்டான், lib மூடி இருக்கும்..

(Note : முல்லை கதிரை விட 2 வயது சிறியவள். முல்லை 10th தான் படிச்சுருக்காங்க.)

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now