நெஞ்சம் பேசுதே
Part 2
முல்லை கோவிலுக்கு சென்ற பிறகு கஸ்தூரி முல்லை வீட்டிற்கு சென்று பார்வதியிடம் பேசுகிறார்...
P: வா கஸ்தூரி
K: அத்தை எப்படி இருக்கே, முல்லை எப்படி இருக்கா
P: எப்படி இருப்பா, கொலை குத்தம் செஞ்சவே மாறி கூனி குறுகி போயிருக்கா, என் பேச்சை கேட்டிருந்தா இப்படி ஆகியிருக்குமா, எல்லாம் தலை எழுத்து...
K: விடு அத்தை, எல்லாம் அந்த தனம் செஞ்ச வேலை...
P: அதை பத்தியே பேச வேண்டாம் கஸ்தூரி
K: சரி அத்தை, முல்லையை கூப்பிடு சித்த பேசிட்டு போறேன்...
P: அவ வீட்ல இல்ல, அவ friend கோவிலுக்கு கூட்டிட்டு போயிருக்கா...
K: ஏன் அத்தை அவளை போகவிட்டே, ஊரெல்லாம் அவளை வாய்க்கு வந்த படி பேசறாங்க...
P: அதுக்கு னு வீட்டுக்குள்ளேயே வெச்சிக்க முடியுமா...
K: ஐயோ அத்தை, அவளை எல்லாரும் ராசி இல்லாதவே அப்படி இப்படி னு பேசறாங்க
P: வாயை கிழிச்சுருவேன், எவன் அது அப்படி பேசறது...
K: ஊரே பேசுது, எத்தனை பேர் கிட்ட சண்டை போடுவே, முதல்ல ஒரு நல்ல மாப்பிளையை பாத்து கட்டி வை, அது வரை அவளை வெளிய விடாதே, நீ சண்டைக்கு போவே, ஆனா அவ அழுதுட்டு இல்ல நிப்பா...
P: உடனே எப்படி முடியும் கஸ்தூரி, மாப்பிளை கிடைக்கணும், அதே சமயம் கல்யாண செலவுக்கு இப்ப கைல பணம் இல்ல...
K: அத்தை நீ சரி னு சொல்லு, மாப்பிளையை நான் கொண்டு வரேன், நீ பணத்தை ready பண்ணு, போய் ps வீட்ல கேளு, அவங்க பையன் கல்யாணத்துக்கு நாம எதுக்கு செலவு செய்யணும்...
P: இந்த கூறுகெட்ட மனுஷன் ஒத்துக்கணுமே, இப்பவே நான் செஞ்ச பாவம், அதான் என் பொண்ணுக்கு இப்படி நடக்குது, என் அக்காவுக்கு நான் பண்ணுன தோரகத்துக்கு தான் என் பொண்ணு அனுபவிக்கறா னு ஒரே புலம்பல்...
DU LIEST GERADE
நெஞ்சம் பேசுதே
Fanfictionகதிரும் முல்லையும் காதலித்து மிகவும் சந்தோசமாக திருமணம் செய்து கொள்வார்கள்