நெஞ்சம் பேசுதே
Part 16
நாட்கள் நகர்ந்தது, dec12 அன்று முல்லையும் கதிரும் சேர்ந்து jm anniversary ஐ கொண்டாடினர், jm ஒருவித குற்ற உணர்வோடு இருக்க, முல்லை அவர்களிடம் பேசி சந்தோசமாக கொண்டாட வைத்தாள், கதிர் முல்லை கண்ணன் மூவரும் அவர்களின் காதல் வாழ்க்கையை பற்றி பல கேள்விகளை கேட்டு போட்டி வைத்து விளையாடினர், dm ஐயும் விட்டுவைக்க வில்லை, அன்று ps குடும்பமே சந்தோசமாக இருந்தது..
அன்று இரவு கதிர் தூங்கவே இல்லை, போன வருடம் இதே நாள் அவர்கள் வீடு எவ்வாறு இருந்தது என்றும், இந்த வருடம் அதே நாள் எவ்வாறு இருக்கிறது என்றும் யோசிக்க, முல்லையின் கண்ணீர் நிறைந்த முகமும், சிரிப்பு கலந்த முகமும் மாறி மாறி நினைவு வர அவன் முல்லையின் சிந்தனையில் மூழ்கினான், காதலெனும் முத்தை எடுத்தான், இனி வரும் வாழ்வில் முல்லையின் முகத்தில் சிரிப்பு மட்டுமே வர வேண்டும், தான் மட்டுமே அதை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான், தன் மனதின் விருப்பத்தை எவ்வாறு முல்லையிடம் சொல்வது என யோசிக்க, ஒரு நல்ல நாள் தேவை என முடிவு எடுத்தான், அதோடு முல்லையின் பெற்றோரும் இதை ஏற்க வேண்டும், அதற்கு தன் தகுதி உயர வேண்டும், இப்போதைக்கு பரீட்சை முடியட்டும், பின்பு வேறு என்ன செய்வது என யோசித்து கொள்ளலாம், அதோடு அவளுக்கு வரும் வரனை எதாவது செய்து தடுத்து விட எண்ணினான்....
My mv: வேற வழி இல்ல கதிரு அதை தான் பண்ணனும்... ஆனா ஒன்னு நீ செய்யலானாலும் முல்லை செஞ்சுடும், அந்த புள்ளை செய்யலானாலும் MU,P,LAK செஞ்சிருவாங்க, அவங்களும் தோத்து போய்ட்டா நான் செய்யறேன்...
நாட்கள் நகர்ந்தது, பொங்கல் celebration எப்பவும் போல பண்ணை வீட்டில் நடந்தது, அதன் பின் மூர்த்தி அந்த வரனின் ஜாதகத்தை பார்வதியிடம் கொடுக்க km என்ன செய்வதென்று யோசித்தனர், km முகத்தை பார்த்து பார்வதியும் lak யும் சிரித்து கொண்டனர்...
பார்வதி இரண்டு நாள் கழித்து ஜாதகம் பொருந்தவில்லை என்று மூர்த்தியிடம் திருப்பி குடுக்க km முகம் பிரகாசம் ஆனது, feb மாதம் தொடங்கியது, இரவு முழுவதும் முல்லை video call இல் கதிருடன் இணைந்து படிக்க உதவினாள்...
YOU ARE READING
நெஞ்சம் பேசுதே
Fanfictionகதிரும் முல்லையும் காதலித்து மிகவும் சந்தோசமாக திருமணம் செய்து கொள்வார்கள்