ஓசை-01

20 4 4
                                    

💘இதயத்தின் ஓசை💘
       💓Lub Dub💓

ஓசை:01

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு இயற்கை  அன்னையின் வரம் பெற்று  ஆசியா கண்டத்தில் இந்தியாவிற்கு தெற்கே வெளிநாட்டவர்களை கொள்ளை கொண்டு அவர்களது வாயாலேயே சுவர்க்க பூமினு அழைக்கப்படும்  ஒரு தீவு..

சுத்த தமிழில் இலங்கை என்று சொல்வது குறைந்து ஸ்ரீலங்கான்னே பலராலும் அழைக்கப்படும் ஒரு அழகிய நாடு...

பார்க்கும் இடமெல்லாம்  பச்சை பசேலன காட்சி தந்து கண்களை குளிர்விக்க வைத்து.... வாழ்ந்தா ஸ்ரீலங்கால தான்  வாழனும்னு நினைக்க வைக்கிற மேஜிக்கை நம்முள்  விதைக்கும்...

ஒரு அழகிய நாட்டில் தான் நம்ம கதை ஆரம்பமாக போகின்றது..

வாங்க பார்க்கலாம்....🥰

சுற்றிலும் மலைகள் மரங்கள் காடுகள்....சல சல அருவிகள்னு இலங்கையிலே உயர்ந்த  இடத்தில் முஸ்லிம் சிங்களவர் தமிழர் என  பலரும் கலந்து எல்லாரும்  ஒற்றுமையாய் வாழும் முற்றிலும் இயற்கையையே அரணாய் கொண்ட
ஓர் கண்கவர் பிரதேசமே  கண்டி நகர்...

அப்படிபட்ட பிரதேசத்தில் சில பல ஊர்களை தாண்டி ஏதோ ஓர் மூலையில்  இருக்கும்....சுற்றி வர மூங்கில்  காடுகளை மட்டுமே கொண்ட ஓர் ஊரு தான் *உன பம்பு கெதர*

(கற்பனை ஊரு தாங்க)

(உன பம்புன்னா இது சிங்கள சொல் தமிழில் மூங்கில்னு சொல்லப்படும்  கெதரன்னா வீடு)

மூங்கில் வீடுனு பெயர் பெற்ற ஊர தான் நாம இப்போ பார்க்க போறோம்...அங்க நமக்கு தெரிஞ்சவங்க யாரும்  இருக்காங்களானு போய் தான் பார்ப்போமே  வாங்க....

தூரத்தே ஒலிக்கும் பாங்கு(Azaan) ஓசையோடு பறவைகளின் கீச்சிலிடலோடு சேவலின் கூவலோடு  அதையும் மீறிய ஷைத்தானின் சதியால் நாய்களின் குரைச்சலோடு  இனிதென புலர்ந்தது அந்த அதிகாலை வேளை🌥️

மனித மிருக ஷைத்தானின் சதிகளை மீறியும் ஏதோ ஒரு ஓசை....மண் வாசனையோடு மூக்கை துளைக்க.... இதமான தென்றல் மேனியை வருட ஒரு தேத்தன்னி (தேநீர்) குடிச்சா  நல்லா இருக்கும்னு நினைக்க வைக்கிற அளவு ஏதோ ஒன்று  இதயக்கதவை திறக்க...

💘இதயத்தின் ஓசை💘💗Lub Dub💘Where stories live. Discover now