💘இதயத்தின் ஓசை💘
💓Lub Dub💓ஓசை:03
In Beach🌊
மேகப்பஞ்சில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்த சூரியனோ..
வெட்கமே இல்லாமல் வெற்றுமேனியில் நடனமாடி கொண்டிருந்த நீல நிற கடல் தேவதைக்கு தன் கதிர்களை இறகு போல விரித்து போர்வையாக போர்த்திட நீல நிறமோடு செம்மஞ்சள் கலந்து மினுமினுப்போடு ஒளியை தர...
அலைகள் வந்து வந்து கரையை முத்தமிட்டு தன் பாசத்தை உணர்த்த...
கடலோடு ஒன்றிய உப்போ மைன் ரோட்டிற்கும் தன் நறுமணத்தை அனுப்ப..
பட்டம் விடுவதற்காய் இப்பொழுதில் இருந்தே ஒவ்வொரு வடிவத்தில் ஒவ்வொரு நிறங்களில் பட்டத்தை கையில் எடுத்து அங்கும் இங்கும் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அதனோடு தடுமாற..
இறால் வடை இறால் வடைனு ஒரு கூடையில் விற்று வர... அதை எடுத்து வாயில் வைக்க வே எச்சில் ஊறும்...🤤
சில பேர் bubble விட அதை உடைக்க சிறுவர்கள் துள்ளி குதிக்க... இன்னும் பல வகை விளையாட்டு பொருட்கள் விற்க... அது எல்லாம் வாங்கவே கை நிறைய காசு வேணும்...
Beach னாவே ஐஸ்கிரீமுக்கு பஞ்சம் இருக்காது.... அந்த ஐஸ் இந்த ஐஸ் னு ஒவ்வெருவராய் விற்று வர எல்லாம் ருசி பார்த்திட எண்ணம் தோண்றும்..
இது எல்லாம் மீறி பாம்பாட்டி மகுடம் ஊதி கொண்டே கழுத்தில் பாம்பையும் தோளில் குரங்கையும் சுமந்து வர...
அந்த கூத்தை பார்க்கவே பலரும் கூடுவர்..
பல் இல்லாத பாம்புனால கைகளிலும் பிடிக்க கொடுப்பர்..அப்படி பிடிப்பதற்கும் காசு தான்..
இப்படி இயற்கையும் செயற்கையும் கலந்த ஒரு கலவை தான் கொழும்பு கடற்கரை...
இது எதுவும் ரசிக்கும் மனநிலையில் இல்லாது நம்ம அய்யாஷ் தன் நண்பனை நினைத்தே கடலை வெறித்து இருக்க...
அவனோ அவனின் ஏனைய நண்பர்களோடு கதையளத்து பாம்பு பட்டம் விட்டு கொண்டு இருந்தான்..
BẠN ĐANG ĐỌC
💘இதயத்தின் ஓசை💘💗Lub Dub💘
Thơ ca'''💘இதயத்தின் ஓசை💘 💓Lub Dub💓 Promo சாலிஹான கணவனுக்காய் காத்திருக்கும் கறுப்பு ரோஜா நம்ம ஹீரோயின்.. மார்டன் பெண் வெள்ளை விளக்குமாறை தேடும் வெள்ளை ராஜா நம்ம ஹீரோ... ரோஜாவின் இதயத்தின் ஓசை ராஜாவிற்கு கேட்குமா..? ராஜாவின் இதயத்தின் ஆசை...