Special one shot (kutty story)
Part 2
முருகன் : "அம்மாடி முல்ல"
முருகன் அழைத்தது முல்லையின் காதுகளில் விழுந்ததோ இல்லையோ கதிரின் செவிகளில் தெளிவாக விழுந்தது.
சடாரென திரும்பி, முல்லையை பார்க்க முல்லை கண்களில் உயிரில்லாமல் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளைப் பார்த்ததும் மனதில் இனம் புரியாத நிம்மதி பரவ,
சந்தோஷமாக எழ நினைக்கையில் சட்டென,
(ஒருவேளை அவளுக்கு நம்மல பார்க்க பிடிக்கலேன்னா)
நினைவே விழிகளை நிறைக்க கதிர் எழ மனமில்லாமல் மறுபக்கம் தூணில் மறைந்து கண்மூடி அமர்ந்திருந்தான்.
முருகன் கவலை தேய்ந்த குரலில் மீண்டும் அழைக்க "அம்மாடி!"
.
முல்லை நினைவுக்கு வந்தாள். "ம்... என்னப்பா?""ஏம்மா இப்படி உட்கார்ந்து இருக்க? உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்குமா அப்பாவுக்கு. ஏதாவது பிரச்சினையா? அப்பாகிட்ட சொல்லக்கூடாதாம்மா? வீட்ல ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்கன்னு தான் கோவிலுக்கு கூட்டி வந்தேன். இங்கேயும் இப்படி இருந்தா எப்படிம்மா?"
முல்லை : (மனதை தேற்றிக்கொண்டு) அதெல்லாம் ஒண்ணுலப்பா.
முருகன் : "நா உன் அப்பாம்மா. எனக்கு தெரியாதா? உன் மனசு மாப்ளையை தேடுறது என் கண்ணுக்கு தெரியுதும்மா. ஆனாலும் உன் மனசு ஏதோ தடுமாறுது. அம்மாடி எதா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லுமா."
முல்லை கண்களில் நீர் நிறைய, "எனக்கு யாரும் வேணாம்பா. நா காலம் முழுக்க நம்ம வீட்லேயே இருந்துக்கறேன். நாம யாரையும் கஷ்டப்படுத்த வேணாம்பா."
கண்மூடி அமர்ந்திருந்தவன் திடுக்கிட்டு விழித்தான்.
"காலம் முழுக்கவா? அவ்ளோ வெறுப்பா நம்ம மேல?"முருகன் : "நீ யாரம்மா கஷ்டப்படுத்தப்போற? மாப்ளையையா?"
முல்லை மௌனிக்க,
முருகன் ஆறுதலாய் முல்லை கைப்பற்றி, "அம்மாடி! மாப்ளையை பத்தி எனக்கு தெரியும்மா. உன்னை ஒருநாள் வீட்டுக்கு கூட்டிப்போறேன்னு சொன்னதுக்கே அவரு என்ன தவி தவிச்சாருன்னு எனக்கு தெரியும்மா. அவருக்கு உன்மேல பிரியம் ஜாஸ்திமா. ஆனா என்ன அத வெளிக்காட்ட தெரியாம கரடுமரடா நடந்துக்கறார் அவ்வளவுதான்."