உயிரில் கலந்த உறவே....

1.2K 59 5
                                    

நாட்களும் அதன் போக்கில் நகர ஆரம்பித்தது. ராஷ்மிகாவை யாழினி சொந்த சகோதரியாகவே நடத்தினாள். சங்கரனிற்கு பிடிக்கவில்லை என்றாலும் மருமகளின் பிடிவாதம் பற்றி அறிந்தவர் எதுவும் சொல்லவில்லை.

நிஷாந்தி யாழினியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டு அம்மா அம்மா என்று அவள் முந்தானையை பிடித்துக் கொண்டே சுற்றி வந்தாள் . ஆனால் யாழினி நிஷாந்தியின் பாசத்தில் தன் மகள் விஷாலினி தன்னை விட்டு தூரமாக போகிறாள் என்பதை உணர மறந்தாள்.

விஷாலினியின் மீது யாழினி உயிரையே வைத்திருந்தாலும் அவளை கவனிக்க இந்த வீட்டில் அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, பெரியபாட்டி  போதாக்குறைக்கு யாழினியின் பெற்றோர் என இத்தனை பேர் இருப்பதாலும், நிஷாந்தியை யாரும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை அதனால் நிஷாந்தியின் மீது தன்னுடைய முழு அன்பையும் அவள் காட்டிட குழந்தையும் தன் தாயை முழுவதும்  மறந்து விட்டது யாழினியின் அன்பில். நிஷாந்திக்கு யாழினி, ராஷ்மிகா இருவரில் யார் அவளுடைய அம்மா என்று யாரும் கேட்டால் யாழினியை தான் கை காட்டுவாள் அப்படி ஒரு பிணைப்பு இருவருக்குள்ளும்.

என்ன யாழினி ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற விதார்த்திடம் ஒன்றும் இல்லைங்க நம்ம வைஷு இப்ப எல்லாம் என்கிட்ட வரதே இல்லை. உங்க கிட்ட இருக்காள், அண்ணி , அத்தை , பாட்டி மூன்று பேர் கிட்டையும் இருக்காள். என்கிட்ட மட்டும் வருவதே இல்லை அதான் ஒரு மாதிரியா இருக்கு என்றாள் யாழினி. அவள் குழந்தை யாழி நீ நிஷாந்தி கிட்ட ரொம்ப அட்டாச்சா இருக்கிறது அவளுக்கு பிடிக்கலை போல எல்லாமே போக போக சரியாகிரும் என்றான் விதார்த். சரிங்க என்றவள் எழுந்திருக்க அவள் கை பிடித்து அமர வைத்தவன் ஏன்டி என்னை மாமானு கூப்பிட மாட்டேங்கிற என்றான். அவள் அவனிடம் எனக்கு அப்படி கூப்பிட இப்போ தோணலை என்றவள் கிளம்பிட திமிர் பிடிச்சவள் என்று கூறி விட்டு அவன் கிளம்பினான். எதார்த்தமாக ராஷ்மிகாவின் அறைக்கதவு திறந்திருக்க அங்கே சென்ற விதார்த் அவளிடம் சிறிது நேரம் பேசி விட்டு தன் மகள் விஷாலினியுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.

உயிரில் கலந்த உறவே...Where stories live. Discover now