உயிராய் உணர்வில் உறைந்தவளே...

660 31 2
                                    

சுதர்சன் மருத்துவமனைக்கு வந்தவன் தேவகியின் அருகில் வந்து ஆண்ட்டி அக்கா எப்படி இருக்காங்க என்றான். இருக்காப்பா ஏதோ என்று அவள் இருந்த அறையைக் காட்ட உள்ளே சென்றவன் அக்கா , அக்கா என்று அழுது விட்டு  அவள் காதில் குனிந்து ஏதோ கூறினான். அது என்னவென்று அவர்கள் இருவர் தவிற யாருக்குத் தெரியும். அவன் கூறிய செய்தி அவள் அடி மனம் வரை சென்றது போலும் அவன் சென்ற சில நிமிடங்களில் கண் விழித்தாள் குந்தவை..

கண் விழித்த குந்தவையின் கண்கள் தேடியது என்னவோ அவள் கணவனைத் தான். எழில் எழில் என்றவளிடம் அக்கா அத்தான் போயிட்டாருக்கா என்றாள் சங்கவி. அவளைப் பார்த்து வெற்றுப் புன்னகை சிந்தினாள் குந்தவை.

சுதர்சன் கூறிய தகவலை உதிரனிடம் கூற வேண்டும் என்று நினைத்தவள் எழில் எழில் என்று மீண்டும் கூற சங்கவி நீ் என்ன பைத்தியமா அக்கா என்று குந்தவையை திட்ட சங்கவி நான் எழில் கிட்ட பேசணும் ப்ளீஸ் என்று வற்புறுத்த அவனே வந்து சேர்ந்தான்.

அத்தான் நல்ல வேளை வந்துட்டிங்க என்ற சங்கவி குந்தவை கண் விழித்ததைப் பற்றி கூறவும் அவளைக் காணச் சென்றவனிடம் எழில் எழில் உங்க  உயிருக்கு ஆபத்து ப்ளீஸ் இந்த வேலையை  விட்ருங்க என்றவள் அவனிடம் விமலன் விமலனாதித்யன் என்றவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் மயங்கி விட்டாள். குந்தவை குந்தவை என்று அவன் கத்திட அவள் மயங்கினாள்.

என்ன நடந்துச்சு சங்கவி என்றவனிடம் அத்தான் சுதர்சன் வந்தான் அவன் பேசிட்டு போன  கொஞ்ச நேரத்திலே அக்கா கண் விழிச்சுட்டாள். கண் விழிச்சதுமே எழில் எழில்னு தான் சொல்லிட்டு இருந்தாள். நீங்க வந்திங்க அவ்வளவு தான் என்றாள்.

சுதர்சன் அக்கா எப்படி இருக்காங்க என்ற சௌமியாவிடம் அக்கா கண்டிப்பா கண் முழிச்சுருவாங்க என்றான். எப்படி சொல்ற என்ற சௌமியாவிடம் அக்கா மாமா மேல உயிரையே வச்சுருக்காங்க அவருக்கு ஆபத்து இருக்குனு சொன்னா எப்படி கண் திறக்காமல் இருப்பாங்க என்ற சுதர்சன் தான் குந்தவையிடம் கூறியவற்றை தன் நண்பர்களிடம் கூறினான்.

உயிராய் உணர்வில் உறைந்தவளே....Where stories live. Discover now