உயிராய் உணர்வில் உறைந்தவளே...

685 32 5
                                    

அன்று மாலை சந்திரன் கெமிஸ்ட்ரி லேபில் யாருடனோ மொபைலில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு பின்னால் சென்று அவன் உடம்பில் ஊசியை சொருகினான் சுதர்சன். பிறகு அவனையும் அதே போல் கொலை செய்தனர் ஐவரும். அவனைக் கொல்லும் போது அவர்கள் முகத்தில் இருந்த திருப்திக்கு அளவே இல்லை அவனைக் கொலை செய்த பிறகு ஐவரும் குந்தவையை சந்திக்கச் சென்றனர்.

குந்தவையோ இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஷீலா, சூர்யகுமார் இருவரையும் பழிதீர்க்க வேண்டும் என்று கூறினாள். அவர்கள்  இருவரையும் ஒரே நாளில் பழிதீர்க்க வேண்டும் என்றவளிடம் ஏன் அக்கா இவ்வளவு அவசரம் என்றான் நிரூபன். இல்லடா எழில் இந்த கேஸ்ல ரொம்ப தீவிரமா குற்றவாளிகளை தேடிட்டு இருக்காரு அதனால தான் சொல்றேன் எவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்கிறோமோ அவ்வளவு நல்லது என்ற குந்தவையிடம் சரிங்க அக்கா என்று ஐவரும் கூறிவிட்டு அடுத்த நாளே சூர்யகுமார், ஷீலா இருவரையுமே அதே போலவே  கொலை செய்து விட்டனர். அவர்கள் கொலையானது வெள்ளிக்கிழமை என்பதால் இரண்டு்நாட்களாக கேட்பாரற்று கிடந்த அவர்களது உடல்கள் டீகம்போஸ் ஆகிவிட்டது.

அன்று தான் குந்தவைக்கும் விபத்து நடந்தது. அதனால் உதிரனும் கொஞ்சம் அசந்து விட்டான் என்று விமலனைக் கொல்ல ஐவரும் திட்டம் தீட்டிட ஆனால் அவர்களால் விமலனை நெருங்க முடியவில்லை.

அதன்பிறகு குந்தவை தானே அவனை தன் கையால் கொல்ல நினைத்து சென்ற போது தான் குந்தவையின் எண்ணம் அறிந்த விமலன் அவளை தன் இரையாக்க நினைக்க அதற்குள் உதிரன் வந்து அவளை காப்பாற்றி விட்டான்.

இவ்வாறு நடந்த அனைத்தையும் ஐவரும் உதிரன்எழிலமுதனிடம் கூறிட அவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். அவனது இரத்தநாளங்கள் துடித்து எழுந்து அருகில் இருந்த செல்லில் கிடந்த விமலனை அடித்து துவைத்து விட்டான்.

உதிரனும் நடந்தவற்றை நினைத்து பார்த்தான்.

உதிரனுக்கு இறந்து போன ஐவர் பற்றிய தகவல்கள் கிடைக்க குந்தவையே வழி செய்தாள். அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை உதிரனுக்கு கொரியர் செய்து வைத்தாள். அந்த புகைப்படத்தைக் கண்ட பிறகு உதிரனும் இந்த வழக்கை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தவன் அந்த ஐவரின் ஜாதகத்தையும் தோண்டி துருவி எடுத்து விட்டான். அந்த ஐவரால் இறந்து போன மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். சௌதாமினி, யுவராணி, மீனாட்சி, கபிலன், மித்ரன் மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய மாணவர்கள் இறந்து போனது தெரியவந்தது. அதற்கெல்லாம் சூத்திரதாரியான விமலனை எதில் சிக்க வைக்கலாம் என்று நிறைய ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தான். அதன்படி இந்த ஐந்து மாணவர்களுக்கு முன்னால் இறந்து போன மாணவர்களைப் பற்றிய தகவலை சேகரித்து விசாரித்த போது இன்னும் அதிர்ச்சிகரமான விசயங்கள் கிடைக்க ஆரம்பித்தது. எல்லாம் சேகரித்து விமலனை கைது செய்ய ஏற்பாடு செய்த போது தான் உதிரன்எழிலமுதன், குந்தவை இவர்களுக்கு விவாகரத்து நடந்தது. அன்று அவளைக் காண அவள் வீட்டிற்கு சென்ற பொழுது தான் அவள் தன் மாணவர்களோடு சேர்ந்து அந்த ஐந்து ஆசிரியர்களை கொலை செய்த வீடியோவை பார்த்து விட்டான். அவனுக்கு முன்னமே குந்தவை மீது இருந்த சந்தேகம் அதைக் கண்டதும் உறுதியாகி விட்டது. அதனாலே அவன் அவளை கைது செய்தான்.

உயிராய் உணர்வில் உறைந்தவளே....Where stories live. Discover now