கதிரவன் வண்டியில் வந்துக் கொண்டிருக்க அதி காலை விடியல் ஒருவர் முகம் ஒருவர் அறியாத பொழுது காலை கதிரவன் விடிய எட்டி பார்க்கிறான்;
கோடை மழலைச் சிறு சாரல் அடிக்க வண்டிக் கண்ணாடியில் தொலைவில் ஓர் பெண் மாலை ரோஸின் நிறத்தில் பட்டு பாவடைத் தாவணியில்;வரும் வழியில் பறித்து மலர்கள் கைகள் நிறைந்திருக்க சாலை நடுவே கோடை மழையின் நீர்த்தேங்கிக் கிடக்க அவள் மலர்கள் ஏந்தி நடந்து வருவதை பார்த்து கதிரவன் வண்டியை நிறுத்த
கதிரவன்: யாரு இது புதுசா தெரியிது இந்த நேரத்துக்கு வருவது
ஓ 6 மணி பஸ் வந்திருக்கும்
இந்த சாலையோரம் வந்தால் நம்ம ஊரு பொம்பல புள்ளையா தான் இருக்கும் ஒத்தைல வருவது பாதுகாப்பில்லையே மழை வேற பேயிது பாவம் யாரு எனக் கேட்போம்
என வண்டியில் நிறுத்தி யோசித்து கொண்டிருந்தான்
பூங்கிளி அருகில் வர ஒரு பாம்பைக் கண்டு அஞ்சி அதைத் தாண்டி ஓடி வந்து கதிரவனின் மேலே விழ கதிரவனும் நிலைத் தடுமாறி மழையின் தேங்கிய நீரில் விழ
கைகளில் இருந்த மலர்கள் கதிரவனின் மார்பில் தூவ
"பூங்கொடியால் திருமேனி முல்லை கொடி படர தேர் கொடுத்த பாரி போல!!
இந்த பூங்கொடி கதிரவனின் அகன்ற மார்பில் படர!!
பூங்கொடியின் கருங்கூந்தல் விழிகளின்றி அவள் திருமுகம் மூட!!
இரு விழிகளும் உரசிக் கொள்ள!!
கதிரவனின் விழிகள் அவள் திருமுகம் காண அலைமோத!!காலை விடியல் கதிரவன் மெதுவாக மேலே எழும்ப!!
சாரல் மழையுடன் குளிர்ந்த தென்றல் வீச!!பூங்கொடியின் கேசம் அகல அவள் திருமுகம் கண்டான்!!
கதிரவன் இதுவரை எந்த பெண்ணின் வாசத்தையும் திருமுகத்தையும் இவ்வளவு நெருக்கத்தில் கண்டதில்லை!!
கண்ட சில நொடிகளில் சிறு பாலகனாக இருந்த அவனது மனது!!
YOU ARE READING
kathirmullai kaadhal kaaviyam🤩🤩
FanfictionThis is a story of our ever green couple kathir mullai so stay tuned to know more 😍😍😍😍