3 ஏற்றுக்கொண்ட தோல்வி

2.2K 100 6
                                    

3 ஏற்றுக்கொண்ட தோல்வி

சில நேரங்களில், இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை தப்புவிக்க, வாழ்க்கை பல சந்தர்ப்பங்களை தருகிறது. ஆனால் நாம் தான் அதை புரிந்துகொள்ளாமல் வலிய சென்று அதில் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். அப்படித் தான் இன்று சித்தார்த்தும் தவித்துக் கொண்டிருக்கிறான். தான் விரும்பிய பெண்ணை மணக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், திருமணத்தைத் தாமதப் படுத்த அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை அவன் புரிந்து கொள்ளவில்லை. *கொஞ்சம் பொறுங்கள்* என்று அவன் கூறியிருந்தால், ஒருவேளை அனைத்தும் மாறி இருக்கலாம்.

இப்பொழுதும் கூட எல்லாம் முடிந்து விட்டதாக நமக்குத் தோன்றவில்லை.  எதை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், ஒரு நொடியில் மாற்றிக் காட்டக் கூடிய வல்லமை படைத்தது தானே வாழ்க்கை...! வாழ்க்கையின் திட்டங்கள் எப்பொழுதுமே கணிக்க முடியாத ஒன்று. நாமும் தான் பார்க்கலாமே சித்தார்த்தின் விதியில் எழுதப்பட்டிருப்பது என்ன என்று...!

தமிழ் குடில்

ஷிவானி சித்தார்த்திடம் பேசவும் இல்லை, அவனிடம் ஒரு மனைவியைப் போல் அவள் நடந்து கொள்ளவும் இல்லை. ஒரே அறையில் இருந்த போதும், ஏதோ ஒரு அன்னியனிடம் நடந்து கொள்வது போல் தான் அவள் அவனிடம் நடந்து கொண்டாள். எப்பொழுதும் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தாள்.

அது சித்தார்த்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அவளிடம் நெருங்குவது மூலம் தனது மனதை மாற்றிக் கொண்டுவிட முடியும் என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவள் இப்படி அவனிடமிருந்து விலகி இருந்தால் எவ்வாறு அவன் ஹரிணியின் நினைவில் இருந்து வெளிவருவது? அவள் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டு இருப்பதை கவனித்தான் அவன்.

"சரிங்கம்மா" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.

அந்த அழைப்பு அவளுடைய அம்மாவிடம் இருந்து வந்திருந்தது.

சமையல் அறைக்கு வந்த ஷிவானி, தேவயானியை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்தாள்.

சில்லென்ற தீயே...! ( முடிந்தது)Where stories live. Discover now