2 விதியின் விளையாட்டு

2.2K 103 15
                                    

2 விதியின் விளையாட்டு

யாரும் எதிர்பாராத வண்ணம் கொழும்பு நகரத்தில் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்தது...! தொடர் குண்டுவெடிப்பு...! அது மொத்த இலங்கையையும் நிலைகுலையச் செய்தது. ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கில் ஆழ்ந்தது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.  தொலைத்தொடர்பு சாதனங்களும், வலைத்தளமும் அரசாங்கத்தால் மொத்தமாய் முடக்கப்பட்டன. தீவு நாடான இலங்கை, உலகத்தின் தொடர்பில் இருந்து ஒட்டுமொத்தமாய் அறுந்து, தீவாகிப்போனது.

ஏதும் செய்ய இயலாதவனாய் கொழும்புவில் அகப்பட்டுக் கொண்டான் சித்தார்த். எந்த வியாபார நோக்கத்திற்காக அவன் கொழும்பு சென்றானோ அது ரத்தானது.

சுவாமிநாதனும் தேவயானியும் சித்தார்த்திடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காமல் பரிதவித்து போனார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது சுவாமிநாதனுக்கு வெங்கடேசனிடம் இருந்து அழைப்பு வந்தது. பதற்றத்துடன் அந்த அழைப்பை ஏற்று பேசினார் சுவாமிநாதன்.

"சித்தார்த்தை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா, சுவாமிநாதன்?"

"இன்னும் எதுவும் தெரியல, வெங்கடேசன்"

"கவலைப்படாதீங்க. சித்தார்த் நல்லா இருப்பார். நம்ம நல்லதாவே நினைக்கலாம்"

"அப்படித் தான் நாங்களும் நெனச்சுக்கிட்டு இருக்கோம். அவனுக்கு ஏதாவது சந்தர்ப்பம் கிடைச்சா நிச்சயமா நம்மளை காண்டாக்ட் பண்ணுவான்"

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ம காத்திருக்கலாம்"

"ரொம்ப நன்றி, வெங்கடேசன்"

வெங்கடேசன் பேசிய வார்த்தைகள் சுவாமிநாதனுக்கு நிம்மதியை தந்தது. நல்லவேளை அவர் எதுவும் அபசகுனமாக நினைத்துக் கொள்ளவில்லை. தன் மகனுக்கு ஒரு நல்ல மாமனார் கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தார் சுவாமிநாதன்.

மூன்று நாட்கள் கடந்தன. சித்தார்த்திடம் இருந்து எந்த செய்தியும் இல்லை. ஓயாமல் அழுது கொண்டிருந்தார் தேவயானி. சுவாமிநாதனின் கைபேசி ஒலிக்க, சந்தோஷத்தில் துள்ளி குதித்தார் சுவாமிநாதன். அந்த அழைப்பு இலங்கையில் இருந்து வந்தது.

சில்லென்ற தீயே...! ( முடிந்தது)Onde histórias criam vida. Descubra agora