இதயத்துக்கு அருகே இருக்கும் குண்டை வெளியே எடுக்க ஆபரேஷன் பண்ண கொண்டு போகிறோம்....உங்க மனைவியை பார்க்கணும்னா போய் பார்த்துக்கோங்க...டாக்டர் சொன்னதும் மகளை தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தான்....
அவள் அருகே சென்று அமர்ந்தான்.....trips ஏறி கொண்டு இருந்த அவள் கைகளை பிடித்தவன்.....இந்த பாழாய் போன காதல் எவ்வளவு ஊதாசின படுத்தினாலும் மீண்டும் மீண்டும் உன்னை விட்டு செல்ல மறுக்கிறது😐... நீ திருந்திட்டியா??இல்லையானு எனக்கு தெரியாது ... ஆனா என்னால இதுக்கு மேல நடிக்க முடியாது....
ஆமா..நான் இவளோ நாள் நடிசிட்டு இருந்துருக்கென்...அதுவே நீ குண்டடி பட்டு விழும்போது எனக்கு உயிர் போவது போல் வலித்த போது தான் புரிந்தது....😐😔...ஒரு முறையாவது நீ திருந்துவதை என் அம்மா பார்க்க மாட்டங்களானு ஏங்கி இருக்கேன்...அது நடக்கலை.....
உன்மேல இருக்கும் கோபம் வருத்தம் எதுவும் போகல...என் காதலை போல....மன்னிக்கவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம....என் நிலமை...??சற்று நிறுத்தினான்....பின் தேஜாவை அவள் அருகே நிறுத்தி.....குட்டி...இது...இதோ...உன் ஜனா மிஸ்...இவுங்க தான் உன் அம்மா😊...
அம்மா...அம்மானு கூப்பிடு.....மெல்ல அவள் அருகே வந்த குழந்தை....அம்மா...என தன் மழலை குரலில் அழைக்க....மயங்கி இருந்தவலின் உயிர் வரை சென்றது அந்த குரல்...
இதய துடிப்பு அதிகரிப்பது அங்கிருந்த கணினி வழியே கண்டவனுக்கே கண்கள் கலங்கியது.....இமைகள் அசைந்தது ஆனால் கண்கள் திறக்க முடியவில்லை அவளால்...தேஜாவிற்கு அவன் மறுபடியும் கண்களை காட்ட...அம்மா... வாங்கம்மா...எனும் போதே தேஜா கண்ணீர் துளி ஜனா கைகளில் விழுந்தது....
நீங்க தான் என்னோட அம்மான்னு ஏன்மா சொல்லல???இதை கண்ணாடி வழியே பார்த்து கொண்டு இருந்த பிரபா, சிவா, இராஜிக்கு கூட கண்ணீர் தான்....5 வயது குழந்தையின் ஏக்கம் வார்த்தைகளாக வெளிப்பட்டது.....
இவ்வளவு நாள் இவளை தாயிடம் இருந்து அவள் அன்பில் இருந்து பிரித்து விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி ராகவனுக்கு மீண்டும் அதிகமாகியது.....
YOU ARE READING
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
Short Storyதன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???