எங்கேயும் காதல்
வாங்க! வாங்க! எல்லாரும் வாங்க! என்ன இப்படி தெகச்சி போய் நிற்கிறீங்க, நான் உங்களை தான் வரவேற்கிறேன்.
அடடா என்ன இந்த பொண்ணு பைத்தியம் மாதிரி பேசுறாளேனு நீங்க மனசுக்குள்ள நினைக்கிறது எனக்கு கேட்குது, இருந்தாலும் நான் உங்களை வீட்டுக்கு அழைத்தது ஏன்னு தெரியுமா? என்று கேட்டுவிட்டு நிறுத்த,
ஒஹ் அதையும் நானே சொல்லனும்னு ஆசைப்படுறீங்களா? சரி சொல்லிட்டா போச்சு.
அய்யோ நான் ஒரு கிறுக்கி என்னை பற்றி எதுவுமே சொல்லாமல், வழவழன்னு பேசிக்கிட்ட போறேன் பாருங்க அது தான் நான்.
புரியலையா? சரி சரி கோபப்படாதீங்க நானே என் பேரை சொல்லிடுறேன்.
என் பேரு அமிர்தா ஆனால் அவனுக்கு மட்டும் எப்போதும் நான் மீரு தான் அய்யோ சத்தம் போட்டு சொல்லிடாதிங்க அவனை பற்றி எங்க வீட்டில் இருக்கிற யாருக்குமே தெரியாது.
அவன் எப்போ என் மனசுக்குள்ள வந்தான்னு நான் சொல்லவா? இதுவரைக்கும் என் காதலை பற்றி என் வீட்டில் இருக்கிற யாருக்குமே தெரியாது தெரிஞ்சா என்னை பைத்தியக்காரின்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க!
என்னடா இப்படி சொல்றேன்னு பார்க்கிறீங்களா? என்னோட காதல் என்னையும் என் டைரியையும் தவிர யாருக்குமே தெரியாது இப்போ உங்களுக்கு தெரிய போகுது.
எனக்குள்ளேயே பொத்தி பொத்தி வச்சிக்கிட்டதால இப்பலாம் யாரிடமும் சாதாரணமா முகம் கொடுத்துக் கூட பேச முடியிறதில்லை.
அந்தளவுக்கு நான் எல்லார் மேலேயும் கோபமா இருக்கேன். அவங்க மேல இருக்கிற கோபத்தை விட அந்த சிடுமூஞ்சி சிங்காரம் மேல தான் எரிமலை குழம்பு கொதிக்கும் பாருங்க அந்தளவுக்கு கொதிச்சிட்டு இருக்கேன்.
இவனால தான் இப்போ என் காதலுக்கு சமாதி கட்டுற வேலை நடக்குது. அது என்ன வேலைன்னு நீங்க நினைக்கிறீங்களா? அந்த சிடுமூஞ்சி சிங்காரத்துக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணுனும்னு பேச்சு வார்த்தை ஓடிகிட்டு இருக்கு ஆனால் நான் சமத்தா நழுவிக்கிட்டே இருக்கேன்.