நான் எந்த மாதிரியான மனுஷினு எனக்கே தெரியலை. எல்லாரோடும் நல்லா பேசும் எனக்கு சின்ன வயதில் இருந்தே நெருக்கமான தோழர்கள் யாரும் இருந்ததே இல்லை. பேசுவேனே தவிர பெரிதான ஒட்டுதல்கள் யாரோடும் இருந்ததில்லை. பள்ளி காலம் இப்படி இருக்க என் இளநிலை பட்ட படிப்பிலும் இந்த நட்பு என்ற வார்த்தை சொல்லும்படி இல்லை. அதற்கு பிறகு ஒரு கல்வியியல் கல்லூரி. கற்பூரம் அடித்து சத்தியம் செய்யறதென்ன தீமிதிச்சு கூட சொல்லலாம் எனக்கு ஒரு நெருக்கமான தோழி/தோழன் இருந்ததே இல்லை. இது ஏன் என்றால்!?
எனக்கு சரியாக சொல்ல தெரியவே இல்லை.ஆனால் எனக்கும் இந்த friendship spark எப்படி இருக்கும்னு காலம் ஒரு நாள் காட்டுச்சு.....
பிடிக்காமல் தான் முதுநிலை பட்ட படிப்பிலும் சேர்ந்தேன். ஆனால் எனக்கு அங்கேதான் அந்த spark வந்தது. பார்த்ததுமே பத்திக்கிச்சுன்னு காதலில் மட்டுமே சொல்லனுமா என்ன?
Love at first sightல எனக்கு நம்பிக்கை இல்லையா இருக்கான்னு தெரியலை. ஆனால் friendship at first sightல நம்பிக்கை இருக்கு. ஏனென்றால் என்னோடது friendship at first sight.என்னை விட மூன்று வயது சின்ன பெண்ணாக இருந்தாலும் பல நேரங்களில் என்னை வழிநடத்துபவள். வெறுப்பை கூட அன்பாய் மட்டுமே காட்டத் தெரிஞ்ச அதிசய பிறவி. கோவக்காரி, இராட்சசி ஆனால் ஆயிரத்தில் ஒருத்தி.
நான் அவளைப் பார்த்த நொடியிலே ஏதோ சந்தோஷத்தை கொடுத்தாள் அந்த பிசாசு, என்னோட மனசுக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருக்கும் என்னோட devil, Angel, cute sister, babydoll, இராட்சசி. அட இதெல்லாம் அவள் பெயரில்லை.
அவளோட பெயர் மோகன பிரசன்யா .
YOU ARE READING
என் டைரி
Randomநான் யாரிடமும் சொல்ல முடியாமல் எனக்குள் என்னை வருத்தும் விஷயங்கள்....