நீ

25 3 1
                                    

மேகங்கள் நிலவின்றி கண்ணீர் சிந்த
நானும் உன் நிழற்படத்துடன்...
எங்கோ விழுந்தது அவ்வளவு சத்தமாக அந்த இடிச்சத்தம்
எனக்கு அதை பற்றி எல்லாம் கவலையில்லை
நீதான் எனக்குள் சத்தமின்றி இறங்கி கொண்டிருக்கிறாயே...
வெளியே மழை வலுக்கிறது
உள்ளே எனக்குள் நீயும்...
உன் கண்கள் பேசும் வார்த்தைகளை காண காத்திருக்கிறேன்
எத்தனை நேரம் கடந்ததோ தெரியவில்லை!
மழை என்னவோ ஓய்ந்திருந்தது
எனக்குள்ளோ ஓயாமல் உன் நினைவுகள்...
அழுது வடிந்திருந்த மேகம் பிரகாசித்தபடி நிலவை பார்த்து சிரித்த அந்த நொடி,
எனக்குள்ளும் பரவ ஆரம்பித்தது அந்த வெளிச்சம் உன்னால்....



என் டைரிWhere stories live. Discover now