எல்லாருக்கும் கல்யாணம் பற்றி நிறைய ஆசை இருக்காம். Grand wedding or simple wedding. ஆனால் they like to/want to get married.
But seriously I am not their type. I don't want to get married now.
ஏதோ 25 வயதுக்கு மேல் ஆகிடுச்சாம். பொண்ணுனா கல்யாணம் செய்துகிட்டே ஆகனுமாம். இதென்ன கொடுமை?!
Imagine this....
"உங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு நபர் கூட உங்களுக்கு திருமணம் நடக்க போகுது. அவங்க உங்களுக்கு ஒரு ஆதர்சன கனவு நாயகன்/நாயகி. நீங்கள் திருமணம் செய்துக்கனும்னு துடியாய் துடிக்கும் ஒரு நபர். அவரும் உங்கள் மேல் அளவுகடந்த காதல் வைச்சுருக்காங்க. சரியா தாலி கட்டவோ/மோதிரம் மாற்றவோ/இல்லை மற்ற உங்க விருப்பத்திற்குரிய மத சடங்கு அல்லது திருமண உத்திரவாதத்தின் போது உங்க திருமணம் நிற்கிறது.( புரியுது என்ன வாய்டா இவ வாய்னு தோனுதா. கெட்ட வார்த்தையில் திட்ட கூட தோன்றலாம்.)
அதே feelings அதான் உணர்வுதான் திருமணம் செய்துக்க விருப்பம் இல்லாமல் இருக்கும் என்னை திருமணத்துக்காக வற்புறுத்தும் போது என்னை உணர வைக்கும்.எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. அது சுதந்திரமானதும் கூட. இந்த உலகத்தை ஒரு சுற்று சுற்றி பார்க்கனும். உயரமான மலை உச்சியில் இருந்து சுற்றி இருக்கும் இடங்களை பார்க்கனும்.
நீச்சல் கத்துகிட்டு நீந்தனும்.
வேகமாகவும் இல்லாம மெதுவாகவும் இல்லாம கொஞ்சம் ஓடனும். அப்படி ஓடும் போது எதிர் காற்று முகத்தில் படும் சுகத்தை அனுபவிக்கனும்.
தினமும் வேலைக்கு போகனும். என்னோட சம்பாத்தியம் என்னோட தன்னம்பிக்கை. அதை அனுபவிக்கனும்.
புது மொழி, புது இடம், புது மனிதர்கள்னு கொஞ்ச காலம் வாழனும்.இன்னும் நிறைய இருக்கே...
அதில் கொஞ்சம் கூட அனுபவிக்க விடாமல் எதுக்கு இப்போ கல்யாணம்னு தோன்றுது.என் பெயருக்கான அடையாளமாக நான் மட்டும் அறியபட ஆசை படுவதில் எனக்கு தவறு இருப்பதாக தோன்றவே இல்லை....
KAMU SEDANG MEMBACA
என் டைரி
Acakநான் யாரிடமும் சொல்ல முடியாமல் எனக்குள் என்னை வருத்தும் விஷயங்கள்....