அனுபமா மெல்ல கண் விழித்தாள். அவள் கண்களுக்குத் தெரிந்தது தீபங்களின் ஒளி. அந்த இருளில் எரிந்த தீப்பந்தங்கள் தரும் ஒளி. அதைக் கொண்டு அவள் அறிந்தது, ஒன்று அவள் இருள் சூழ்ந்த வெளிச்சம் படாத இடத்தில் இருக்க வேண்டும் அல்லது இரவாக இருக்க வேண்டும் என்பது. அவளுக்கு மேலே கற்களால் ஆன வேலைப்படமைந்த மேற்கூரை இருந்ததால் அது குகையாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, இது இரவு நேரம் என்பதை உறுதி செய்தாள். காலை அனுபமா குகையை அடைந்த போது நேரம் காலை பத்து மணியாக இருக்கக்கூடும். தற்போது இரவு என்றால் எத்துணை நேரம் தான் இப்படி சுய நினைவின்றி இருகிறோமோ என்று அவசரமாக எழுந்தாள்.
அவள் கண்விழித்ததும், அருகில் பெண்ணொருத்தி எழுந்து வெளியே சென்று தகவல் தெரிவித்து சிலரை அழைத்து வந்தாள். வந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் இருந்தனர். ஆண்கள் இருவரும் வயதானவர்கள். பெண்கள் இருவரும் இளம்வயதினர். ஒரு முதியவர் அனுபமாவின் அருகில் அமர்ந்து,
அம்மா, சங்கமித்ரா! தற்போது எப்படியம்மா இருக்கிறது? அந்த குகைக்கு ஏனம்மா சென்றாய்? அனைவரையும் கவலைக்குள்ளக்கிவிட்டையே! என்றார்.
நீங்கல்லாம் யாரு? நான் எங்க இருக்கேன்? எப்படி என்ன இங்க கொண்டு வந்தீங்க? இப்போ time என்ன? என்று கேள்விகளை அடுக்கினாள் அனுபமா, அவர் சங்கமித்ரா என்று அழைத்ததை அவள் கவனிக்கவில்லை.
என்னம்மா, என்ன ஆயிற்று? ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? என்ன மருத்துவரே இவள் என்னவோ போல் பேசுகிறாளே? என்று மருத்துவரிடம் கேட்டார் அந்த முதியவர்.
அப்போது தான் அவர் பேசுகின்ற விதத்தையும் அவர்களின் உடைகளையும் அனுபமா கவனித்தாள். என்ன இது இவங்கல்லாம் ஏன் இப்டி சுத்தத் தமிழ்ல பேசுறாங்க? இந்த காலத்துல கூட இப்ப்டில்லமா dress பண்ணுவாங்க என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.
அருகில் இருந்த மற்றொரு முதியவர் இவள் பக்கம் வந்து இவள் கையைப் பற்றி சோதிக்கத் துவங்கினார். இவர் தான் மருத்துவர் போலும். அவர், கையைப் பற்றியதும் திரும்பித் தன் கையை கவனித்தவள் என் watch எங்க? மத்த things ஓட வச்சுருக்காங்களோ? என்று நினைத்தாள்.