பங்குனி வெயிலில் சூரியன் பல்லைக்காட்டி இளித்துக் கொண்டிருக்க அந்த
சென்னை
ரயில்வே ஸ்டேஷனில் அந்த வெயிலிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைந்துக் கொண்டிருந்தனர்.
எப்படியோ சனநெரிசலை கடந்து ஒருவாறு ட்ரெயினில் ஏறி தனக்கான சீட்டில் இருப்பதற்குள் அவனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது..
அவன் நினைத்து இருந்தால் காரில் வந்திருக்கலாம் ஆனால் அவனது நெடுநாள் ஆசையே இப்படி தனியாக ரயிலில் பயணம் செய்வது.. ஆனால் இந்த நெரிசலை அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.. காலையிலே டிக்கெட்டை புக் செய்திருந்திருக்கலாம் அவன் இருந்த பிஸி செடூலில் இந்த பட்டபகலில் தான் அவன் துரதிஷ்டத்திற்கு டிக்கெட் புக் பண்ண கிடைத்தது.இரண்டு இரண்டு பேர் எதிர் எதிர் அமர்ந்திருக்கும் வகையில் அமைந்திருந்த சீட்டில் தன் இருக்கையில் அவன் தனது பையை வைத்து விட்டு எதிர் இருக்கையில் யாரும் இல்லாததால் அதில் அமர்ந்து செல்லில் மூழ்கிபோனான்.
சரியாக ட்ரெயின் கிளம்பப்போகும் நேரத்தில் "எஸ்கியூஸ்மீ" என்ற அழைப்பில் சட்டென திரும்பிப் பார்த்தான்.
எதிரில் நின்றவள் என்ன சொன்னாள் என்பது அவளுக்கே வெளிச்சம்.
தான் பல பெண்களை கடந்து வந்திருக்கிறான் ஆனால் யாரையும் இப்படி அவன் வைத்தகண் வாங்காமல் பார்த்ததில்லை..
ஆளை மயக்கும் சந்தன நிறத்தில் கொஞ்சம் பூசினாற் போல் உள்ள தேகத்திற்கு அவள் அணிந்திருந்த பிங்க் கலர் அந்த சுடிதாரில் பார்ப்பதற்கு அப்படியே பார்பிடோல் பொம்மை போலவே காட்சியளித்தாள்.
பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த குழந்தை அழுததில் நிதர்சனத்தை உணர்ந்தவன் அப்பெண்ணிடம்
" ஸாரி..நீங்க என்ன சொன்னீங்க""இது என்னோட சீட்"
அவன் அமர்ந்திருந்த இருக்கையை சுட்டிக் காட்டினாள்.சட்டென எழுந்தவன் அவன் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஸாரி கேட்டான்.அதற்கு அவளிடம் மெல்லியதாக ஒரு புன்னகை மட்டுமே வெளிவந்தது. அவளை பார்க்க பார்க்க அவனுள் ஏதோ பள்ளி மாணவன் போல் ஒருவித பரவசம் ஏற்பட்டது.அவனுக்கு இந்த பார்த்தவுடனே காதல் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் அவளிடம் ஏனோ இவன் மனம் சிக்குண்டது. அவளிடம் இருந்து தன்மையாக தன் பார்வையை திருப்பிக் கொண்டவன் நொடிக்கொரு முறை அவளை பார்க்கவும் தவறவில்லை. அவன் பார்வை அவளுக்கு உனர்ந்ததோ என்னவோ சட்டென தன் தலையை திருப்பி அவனை பார்த்தாள் அதற்கு சினேகமாக சிரித்தவன் அதன் பிறகு தவறியும் அவள் பக்கம் திரும்பவில்லை..
தனக்குள்ளே தன்னை கேள்வி கேட்டுக்கொண்டான்.. அவள் என்ன நினைத்திருப்பாள் .. தான் ஏன் இப்படி வித்தியாசமாக நடந்து கொண்டோன் என்று தன்னையே கடிந்து கொண்டான்.
YOU ARE READING
உடல் பொருள் உயிரே உனை சேரவா....
Romanceஉணர்வுகள் மிகவும் முக்கியமானவை.. நமது வாழ்வின் பாதியை தீர்மானிப்பதே அவைதான்.தேவையான நேரத்தில் தேவையான மாதிரி நாம் நம் உணர்வுகளை கட்டுப்படித்தினாலே பல பிரச்சினைகளை தடுத்து விடலாம்..உணர்வுக்கு தன்னை அறியாமலே ஒரு பெயரை வைத்துக் கொண்டவன் தன் மனதில் உள்ள...