காதல் என்பது,
மறைக்க தேவையில்லாத ரகசியங்களும்,
அலுப்பு தட்டாத சுவாரசியங்களும்,
உண்மைகளின் வலிகளும்
நிறைந்தது..
அறிவு கொண்டு நிகழும் குறும்பு தனங்களின் அழகியல்..
பவுசுகள் தேவைபடாத இயல்பின் அழகியல்..
பூட்டி வைத்து பாதுகாக்க தேவையில்லாத பரம்பொருள்..
விரல் கோர்த்து செல்லும் தேவதை..
கீழே இறக்கி விட்டாலும்
மடியில் ஏற துடிக்கும் குழந்தை..எல்லோரின் கன்னங்களையும் முத்தமிடும் சாரல் மழை..
எல்லோர் சன்னலலிலும் வீசும் பூங்காற்று..
எல்லோர் கால்களையும் கட்டி தவழும் கடல் அலை..
கட்டியணைத்து முத்தமிடும் போது மட்டுமல்ல..
கடினமான தருணங்களில்,
தாவி தழுவும்போதும் தாய்மையையும்,
நெஞ்சாங்கூட்டில் சாயும்போது நேர்மையையும்,
உணரச் செய்யும்
தனிப்பெரும் துணையே காதல்..❤
𝚂𝚑𝚊𝚏𝚢'𝚜 𝚀𝚞𝚎𝚎𝚗 𝚖𝚊𝚑𝚊🥰
VOCÊ ESTÁ LENDO
♡ என்னவனே.... உனக்காக ❣️
Poesiaகாதலையும்❤, காதலனையும்🥰 ரசிக்கும் அவனின் காதலியாக.....😍 என்னுடைய காதல் கிறுக்கல்களை📜 எழுதலாம் னு இருக்கேன்😉 காதலிப்பவர்களும்.... காதலிக்க ஆசைப்படுபவர்களும்... என்னுடைய சிறிய முயற்சிக்கு உங்களுடைய ஆதரவுகளை வழங்க வேண்டும்.....👍🥰 Love forever ❣️