டிக் டிக் என ஓடும் நிமிட முள்
நம் திட்டங்களை எல்லாம்
முந்திக் கொண்டு ஓட
ஒரு வட்டத்துக்குள் வாழும் நாம்
மலையளவு கடமைகளை செய்ய
காலத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்...வள்ளவனை வணங்கி - அவன் படைப்புகளை
வியந்து, முடியும் தினம் அறியாத
வாழ் நாட்களுக்கு தினம் தினம்
வர்ணம் தீட்டுகையில் ஏதோ ஒன்றை செய்யாது
விட்டு விட்டோமாயென
வாடுகிறது என் மனம்ஆடம்பர வாழ்வை நினைத்தேன்..
அல்லாஹ்வை தொழ மறந்தேன்..
பணப் புதையல்களை நாடினேன்...
பாங்கொலியை கேட்காது மறுத்தேன்..
திருமணத்திற்காக கோடுகோடியாய் செலவளித்தேன்..
திருமறை கூறும் உம்ராவை செய்ய நினைக்கவில்லை..இளம் உயிர்கள்
இறப்பதை கண்டும் ஏன்
இன்னும் கடமைகளை பிட்போடுகிறாய்?
இறுதி நாளின்
இரகசியமான அடையாளங்கள் வெளி வரும் போதும்
இரம்மியமான பொய்களில் ஏன் மயங்குகிறாய்?காலம் நிற்கவில்லை
இனி நிற்க போவதுமில்லை
எமக்கான நேரம் எப்போது
என்று தெரியவில்லை - வாழ்க்கை
என்ஜின் எப்போது நிற்கும்
என்றும் அறிவதில்லை...தோழா!
விரையுங்கள்..
விரகாய் உன் உடல் போகும் முன்..
ஓடுங்கள்...
ஒற்றை கடமைக்காய் ஓடுங்கள் - அங்குள்ள
பாலத்தை வேகமாக கடக்க வேண்டின்
இங்குள்ள கடமையை சரியாக செய்யுங்கள்..நாளை நாளை என்று நினைத்து
நாட்கள் கடந்தது போதும்
கடமைகளை செய்வோம்....
காரிருளாய் நாம் வாழ்வு
வீணாகி விடாதிருக்க
கிடைத்துள்ள கடுகளவு
காலத்தில் நம்
கடமைகளை செய்வோம்...